‘குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 3ம் வாரத்துடன் முடிகிறது. டிசம்பரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது ...
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் தேர்தல் இரண்டாம் முறையாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற அம்மாநில வர்த்தகர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது " 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை பாரதீய ஜனதா தோற்கடித்தது. நான் அதிகமாக கற்றுக்கொள்வதற்கு இந்த தோல்வி உதவியாக இருந்தது. அந்த அடிப்படையில் பாரதீய ஜனதா எனக்கு உதவி செய்துள்ளது.
எனது குடும்பம் எப்போதும் காந்தியின் கொள்கைகளின் மீது பற்றுள்ள குடும்பம். இருந்தபோதிலும் எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களான விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை படத்தில் பார்த்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது"
மேலும் பேசிய ராகுல் பணமதிப்பிழப்பு மற்றும் GST நடைமுறை சிக்கல்களை உருவாக்கி மக்களை மற்றும் வணிகர்களை மோடியின் பிஜேபி அரசு துன்புறுத்துவதாக கூறினார்.
முன்னதாக ஆணையம் குஜராத் சட்டப்பேரவையின் தேர்தலில் முதல் முறையாக வாக்கு ஒப்புகை சீட்டு ( verified paper audit trail - VVPAT) வழங்கப்பட உள்ளது என்று கூறி உள்ளது.
நடந்த டெல்லி மாநகராட்சி எளிதாக வென்ற பிஜேபி ., தேர்தல் முடிந்த மூன்றே மாதத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற இடைதேர்தலில் VVPAT அறிமுகப்படுத்தியபோது மிகவும் மோசமாக 24000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனை கள்ள ஓட்டை வைத்து உத்திரபிரதேசம் மற்றும் டெல்லி மாநகராட்சி எளிதாக வென்றது போல வாக்கு ஒப்புகை சீட்டு (VVPAT ) வைத்து நடந்த தேர்தலில் எதுவும் செய்ய முடியாமல் பிஜேபி படுதோல்வி அடைந்ததாக எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து இருந்தது.
இப்பொது குஜராத்தில் முதல் முறையாக வாக்கு ஒப்புகை சீட்டு (VVPAT ) தேர்வு முறை பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது...
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் இந்த தேர்தலில் பிஜேபி முன்னாள் முதல் அமைச்சர் பிஜேபி டிக்கட்டில் போட்டி இட மாட்டேன் என்று சொன்னது ., மற்றும் பிஜேபி தலைவர் அமித் ஷா மகனின் வருமான ஒரு ஆண்டில் 16000 மடங்கு கூடி 80 கோடி ஆன உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரம் காரணமாக பிஜேபி கட்சியை சோர்வு அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் குஜராத்தில் காங்கிரஸ் சுமார் 20 வருடம் கழித்து வெற்றி அடையும் என்றால் அது மோடி அமித்ஷா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தோல்விக்கு அச்சாரம் போட்டு விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர் .