காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் பருவ மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 21,991 கன அடியில் இருந்து 23,871 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 95 அடியை எட்டி அணையின் நீர்மட்டம் 95.47 கன அடி; நீர் இருப்பு 59.128 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணையின் உயரம் 124 அடி நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கண அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
1 tmc தண்ணீர் குறைந்தால் அணையில் 1.25 அடி தண்ணீர் குறையும்.
1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 tmc குறையும் . அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15,000 கன அடி-யாக உள்ளது.
கடந்த இரண்டு மாதமாக தென்மேற்கு பருவ மழை காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வருகிறது. கர்நாடகாவிலுள்ள கபினி அணை நிறைந்துவிட்டது. ஓசூர் கெளவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் 20 கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து 2,299 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2,168 கன அடியாகவும் உள்ளது. கரையோர கிராமங்களுக்கு விடுப்பட்டிருந்த வெல்ல அபாய எச்சரிக்கை நேற்று ரத்தான நிலையில் இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தகோட்டாவில் உள்ள தரைப்பாலம் ஆற்று நீரில் மூழ்கியதால் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.