நாமக்கல் மாவட்டம், வேலூர் அடுத்துள்ள பெரியமருதூரை சேர்ந்த அன்பழகன் முதல் மகள் கல்பனா யுகவதி (வயது-28). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார். இரண்டாவது மகள் பெயர் வித்யா (வயது-26). சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினீயராக உள்ளார்.

Special Correspondent

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள சனப்பிரட்டியை சேர்ந்தவர் இராமலிங்கம் (வயது-37). சாயப்பட்டறை உரிமையாளரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரியை கல்பனா யுகவதியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனது மனைவி கல்பனா யுகவதியின் தங்கை வித்யாவை இரண்டாவதாக திருமணம் செய்ய திட்டமிட்ட இராமலிங்கம், வித்யாவின் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்காலாம் என்று தனக்கு தெரிந்த ஒரு ஜோதிடரிடம் மாமனார் அன்பழகனை அழைத்துச் சென்றுள்ளார்.

வித்யாவின் ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர், “இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான ஒருவருடன் தான் திருமணம் நடக்கும், அதுவும் நெருகிய உறவுக்குள்ளேதான் திருமணம் நடக்கும், இல்லையானால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆபத்து ஏற்படும்...” என்று சொல்லியுள்ளார். ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்காக, கடந்த, 30-ஆம் தேதி சென்னையிலிருந்த வித்யா சொந்த ஊரான வேலூருக்கு வந்துள்ளார். விடுமுறை முடித்து நேற்று சென்னை செல்ல இருந்த வித்யாவை அவருடைய தந்தை அன்பழகன் பேருந்து நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதையறிந்த இராமலிங்கம், தனது காரில் சென்று வித்யா சென்ற இரு சக்கர வண்டியை சானார்பாளையம் - சேளூர் செல்லப்பம்பாளையம், நான்கு சாலையில் விரட்டி சென்று மறித்துள்ளார். பின்னர், ஜோதிடர் சொன்னபடி தன்னை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளுமாறு வித்யாவை வற்புறுத்தி தனது காரில் ஏறும்படி கட்டயபப்டுதியுள்ளார்.

இந்த நேரத்தில், வித்யா கூச்சலிடவே அவருடைய சத்தம் கேட்டு அருகிலிருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் ஓடிவந்து, இராமலிங்கத்தை பிடித்துக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து வித்யா கொடுத்த புகாரின் பேரில், ப.வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வித்யா-வின் அக்கா கணவர் இராமலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஜோதிடர் பேச்சை கேட்டு வாழ்கை தொலைத்துள்ளேன் என்று புலம்பியபடி இருக்கிறாராம் இராமலிங்கம்...