மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து தற்போது கல்லணை அணை திறந்துவிடப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக அக்டோபர் 2ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று இரவு கல்லணை வந்தடைந்ததை அடுத்து இன்று காலை முதல் விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் விவசாயத்திற்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் 17 லட்சம் ஹெக்டர் ஏக்கர்கள் விவசாயத்திற்காக பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் காவிரிக்காக விநாடியும் 4,750 கனஅடியும், வென்னாருக்காக 4,750 அடி, கல்லணை கால்வாய்க்கு 1,300 கனஅடி மற்றும் கொல்லிடத்திற்கு 1,200 கனஅடி தண்ணீரானது திறந்துவிடப்பட்டிருக்கிறது.
மேலும் இதனால் கடைமடை விவசாயிகளுக்கும் சென்றடையும் விவத்தில் இந்த தண்ணீரானது திறந்தவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் விவசாயிகள் தரப்பில், தூர்வாராமலே இந்த தண்ணீரானது திறந்துவிடப்பட்டிருக்கிறது, இதனால் விவசாயத்திற்கு இந்த தண்ணீரானது பயன்படுமா என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சம்பா சாகுபடியானது பொய்த்து போகக்கூடிய அபாய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.