தனது கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 15 நாள் பரோல் கேட்டு சிறைத்துறை டிஐஜியிடம் மனு அளித்துள்ளார்.

Special Correspondent

சசிகலா அளித்துள்ள மனு குறித்து சிறைத்துறை டிஐஜி, சென்னை கமிஷனருக்கு ஒப்புதலும், நோ அப்ஜக்சனும் கேட்டுள்ளார். இதில் என்ன உத்தரவு வருகிறது என்பதை பொறுத்து சிறப்பு கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டும்.

இதனிடையே எடப்பாடி அணியை சார்ந்த வழக்கறிஞர் ஒருவர், சசிகலா பரோல் மனுவை பரிசீலிக்கக் கூடாது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார் சசிகலா. அது தொடர்பான கெஜட்டில் கணவன் என்ற காலத்தில், யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. ஆகையால் நடராஜன் யார் என்ற கேள்வி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா வெளியே வந்தால் அந்த 15 நாளும் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்களை அவர் சந்திக்கக் கூடும், அப்போது பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு, எடப்பாடி தரப்புக்கு எதிரான நடவடிக்கைகள் நடக்கும் என எடப்பாடி தரப்பு நம்புகிறது. ஆகையால் தான் எடப்பாடி தரப்பின் ஆலோசனையின் பேரில்தான் இந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளாராம்.

மேலும், கர்நாடக உள்துறையிடமும், காவல் உயர் அதிகாரிகளிடமும் பரிசீலிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளதாம். அப்போது, சசிகலா மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பரோல் வழங்கினால் தவறாக போய்விடும் என்று எடப்பாடி தரப்பு கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பரோல் கிடைப்பதில் மேலும், மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சசிகலா அணியினர் கடும் பதட்டத்தில் உள்ளனர்...