எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவருக்கான ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் 19 பேர் கடிதம் கொடுத்தபோதே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை அறிவுறுத்தியிருக்க வேண்டும் என்பது வித்யாசாகர்ராவின் எண்ணம்.
ஆனால், 15 நாள் வரை முடிவெடுக்க வேண்டாம். அதற்குள் நிலைமை மாறும் என டெல்லியிலிருந்து சொல்லப்பட்டதால் அமைதி காத்தார். அதற்கு ஏற்றவாறு "முதல்வரை மாற்ற கோருவது உள்கட்சி விவகாரம்' என்கிற விளக்கத்தை தந்தார்.. இதையே பிப் 2017 இல் ஓபிஎஸ் சொல்லும் போதே சொல்லி இருக்கலாமா என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரை வசை பாடின.
"ஆதரவு வாபஸ் பெற்றவர்களை எங்கள் பக்கம் இழுத்துவிட முடியும்" என டெல்லிக்கு எடப்பாடி தரப்பு கொடுத்த நம்பிக்கையில்தான் வித்யாசாகர்ராவை அமைதி காக்க வலியுறுத்தியது பிஜேபி மேலிடம். ஆனால், எதிர்பார்த்த மாதிரி எடப்பாடி-பன்னீர் தரப்பால் சாதிக்க முடியவில்லை.
அதேசமயம் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவர்னரின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் நீதிமன்றம் வரை சென்று சட்டச்சிக்கலை ஏற்படுத்தின.
இதனால், பிஜேபி மேலிடம் அடுத்த அஸ்திரம் எடப்பாடியை வீச செய்த்தது "18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து விட்டு பெரும்பான்மையை நிரூபித்துவிட முடியும்' என்கிற வியூகத்தின் படி தகுதி நீக்கம் செய்தனர்.
இந்த விவகாரம் தமக்குத் தெரியாமல் நடந்ததால் கோபமடைந்த வித்யாசாகர்ராவ், டெல்லியோடு முரண்பட்டார். இதனை வெளிப்படையாக ஜனாதிபதி யிடம் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தார் .இதனை சற்றும் ரசிக்காத டெல்லி மேலிடம் அவரை விடுவித்து நோஸ் கட் செய்துள்ளது...
இந்த நிலையில் இரு விஷயங்கள் தனக்கு சட்ட சிக்கலை மற்றும் நிரந்திர அவமானத்தை ஏற்படுத்தும் என்று ராவ் இப்போது கவலையில் உள்ளதாக அவரின் நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கிறது.
1) கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு எதிராக கோர்ட்டில் திமுக கொறடா செய்த மனு தாக்கல் . திமுக வின் இந்த ராஜதந்திர checkmate மூவ் இதை சற்றும் டெல்லியும் எதிர்பார்க்கவில்லை.
2) ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க டெல்லி எப்படி ஒப்புக்கொண்டது என்பதில் அவருக்கு அதிருப்திதான். காரணம், ஜெயலலிதா உடல் நலம் குறித்து அப்பல்லோவுக்கு சென்று வந்த வகையில் விசாரணைக் கமிஷன் தமக்கு கேள்விகளை அனுப்பினால் அதற்குரிய பதிலை தார்மீக அடிப்படையில் சொல்லியாக வேண்டும்.