துரதிர்ஷடவசமாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், எடப்பாடி எப்படியாவது ஆட்சி கவிழ போகிறது என்பதை உணர்ந்து, அதற்கு முன்னதாக போலீஸ் இலாக்கா மந்திரியாக இருப்பதால் அதனை பயண்படுத்தி எங்கள் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர் என்றார்.
நடராஜன் உடல் நிலை குறித்து அவருக்கு கல்லீரல் மாற்ற வேண்டும். வேறு கல்லீரல் கிடைத்தவுடன் அறுவை சிகிச்சை நடைபெறும். அவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் அனுமதி கோரியுள்ளோம். நிச்சயம் அனுமதி கிடைக்கும். எத்தனை நாள் கிடைக்கும் என்பதை சிறைத்துறை முடிவு செய்யும் என்றார்.
கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடியை ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன். அதனை கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு தான் இப்படி பபூன் மாதிரி தினமும் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றார்.
பொறுப்பு ஆளுநராக இருந்தவர் தட்டி கழித்துவிட்டார். அவரால் மத்திய அரசுக்கே கெட்ட பெயர் வந்துவிட்டது என்று கருதியதால் தான் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி. 18 MLA தகுதி நீக்கம் எல்லாம் இடைக்கால தடை தான். இவை அனைத்தையும் நாங்கள் நீதிமன்றத்தில் முறியடித்து நிச்சயம் வெகு விரைவில் அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.
டெங்குவால் பல பேர் இறந்தால் என்ன? அவர்களுக்கு அவர்கள் ஆட்சியில் இருக்கிற வரை இருந்தால் போதும் என்பது அவர்கள் பேச்சிலும், செயல்பாட்டிலும் நன்றாக தெரிகிறது. டெங்குவை விட கொடியவர்கள் எடப்பாடி அமைச்சர்கள் என்றெல்லாம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தினகரன் பதிலை கூறினார்.