தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறதா என்று தமிழக அரசை கண்டிக்கும் விதத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர் .
கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை என்றும்,
சோதனையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்,
எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ,
நீதிபதிகள் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் டிசம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும் மற்றும் டிஜிபி-க்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழலில் அதிகமாக திளைக்கும் துறையாக பத்திரப்பதிவுத்துறை உள்ளது என்றும் லஞ்சம் இல்லாமல் சார்-பதிவாளர் அலுவலகங்களில் எதுவும் நடக்காது என்ற நிலை உள்ளது என்றும் நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
மேலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திடீர் சோதனைகள் ஏன் சோதனை நடத்தப்படவில்லை என்ற கேள்விக்கு அரசு வழக்கறிஞர் பதில் சொல்லாமல் அமைதியாக நின்று இருந்தார் என்று நீதிமன்ற செய்திகள் தெவிக்கின்றன...