18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கு, திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.

Special Correspondent

அப்போது ஆஜரான டிடிவி தினகரன் தரப்பு வாதங்களையும், முதல்வர் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை 20ஆம் தேதிக்கு அதாவது நேற்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, டிடிவி தினகரன் தரப்பு வாதங்களை கேட்டபின்னர் வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் மீதான விசாரணை வரும் 24 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் தங்களை தகுதி நீக்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கும் பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கொண்டு வந்ததற்காக திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கும் நேற்று விசாரிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, டிடிவி தினகரன் தரப்பு வாதங்களை கேட்டபின்னர் வழக்கை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.