ஆளுநர் நிர்வாக தலையீட்டை வன்மையாக கண்டிப்பதாக கூறிய தமிழக எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் விடுத்தது இருக்கும் அறிக்கையில் :
"ஆளுநர் பன்வாரிலால் நேற்றைய தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் அமர்ந்து, கோவை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருப்பது, தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டத்தில் மேலும் தொடர்கிறார் என்பது கவலையளிக்கிறது என்றும்,
"முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏஜெண்டாக, அலங்காரப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது என்பது மத்திய - மாநில அரசுகளிடையே நிலவும் உறவுக்கும் உகந்தது அல்ல என்றும்,
அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் மாண்புமிகு ஆளுநருக்கும் ஏற்ற செயல் அல்ல, என்பதை மூத்த அரசியல்வாதியான தமிழக ஆளுநர் அவர்கள் உணர்ந்து கொள்வார் என்றும்,
மாநிலத்தில் பொறுப்பான ஒரு அரசு நடக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும் என்றும்,
மாநில அரசு நிர்வாகத்தை முறைப்படுத்த அரசியல் சட்டபூர்வமான அரசு ஆட்சியிலிருந்தால் போதும் என்பதை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உணர்ந்து, அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிர்வாகச் சீர்குலைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது என்றும்,
இந்த அரசின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் புகார்கள், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட மனு உள்ளிட்ட ‘குதிரை பேர’அரசின் மீதான பல புகார்கள் இன்னும் ராஜ்பவனில்தான் நிலுவையில் உள்ளன என்றும்,
அரசியல் சட்டப்படி தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றின் மீது எல்லாம் ‘அறிக்கை’கேட்டிருக்க வேண்டிய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திடீரென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல் அதிகாரிகளை அழைத்து “ஆய்வுக் கூட்டம் நடத்துவது வருந்தத்தக்கது" என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
ஆளுநர் அதிகாரிகளை சந்திப்பது என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வு துறை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்பதையும், புதிய நோய்கள் ஏதாவது இருக்கின்றதா என்பதையும் விசாரிப்பதில் ஆளுநர் ஆர்வம் காட்டினார் என எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் காங்கிரஸ் இல் இருந்து தாவி வாசனில் தாமக வுக்கு பின்னர் அங்கு இருந்து அதிமுகவுக்கு தாவி சென்ற தற்போதைய அதிமுக எம்பி தெரிவித்துள்ளார்...
தமிழக ஆளுநர் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது ஆரோக்கியமான விசயம் தான் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்..மக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களை புறக்கணித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது அவரின் வழக்கம் போல பாணியில் வழவழ வென்று பதிலை சொல்லி விட்டு சென்று விட்டார். இவர் தான் இந்த முறை சென்னை மழையில் நிவாரணம் அமெரிக்கா லண்டன் விட சிறப்பாக இருந்தது என்று சொல்லி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் முழித்த உயர்கல்வி துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது...