தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஆளுநர் தானே நேரடியாக அதிகாரத்தில் தலையிடுவது இதுவே முதல் முறையாகும்.
நேற்று அவர் கோவை மாவட்ட அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து நேரடியாக ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின், விடுதலைசிறுத்தை, காங்கிரஸ., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்தனர்.
முன்னதாக கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொண்டார் .
கோவையில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஈடுபட்டார்.இதற்கு பிறகு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார் .
ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும் என்றும் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்தை தாம் பாராட்டுவதாகவும் கூறினார்.
கோவை மாவட்டம் 89.23% கல்வியறிவு பெற்றுள்ளது, இது தேசிய சராசரியை விட அதிகமாகும் என்று குறிப்பிட்ட அவர், கோவை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன என்றார்.
இதனையடுத்து கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கண்டத்திற்கு பதில் அளிக்கும் விதமாக களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும் என்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை ஆய்வு என சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.