நெல்லையில் இசக்கிமுத்து தனது இரு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கந்துவட்டி தொல்லை காரணமாகதீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சி காரணமாக நீதிமன்றம் அரசை கந்து வட்டி குறித்த நடவடிக்கை கேக்க ஆரம்பித்தது.
இதனை தொடந்து தமிழகத்தில் கந்து வட்டி கொடுமைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
கந்து வட்டி கொடுமையால் பொன்னேரி அருகே தனியார் ஒப்பந்தக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். ரமேஷ் கந்து வட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல் நெல்லை மாவட்டம் ஆலங்குடி அருகே கந்துவட்டி கொடுமையால் தங்கப்பழம் என்ற பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளை அரசு மருத்துவமனையில் தங்கபழம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வந்து கந்து வட்டி கொடுமையால் அவதிப்பட்டு வருவதால், கருணைக் கொலை செய்து விடுமாறு டி.ஆர்.ஓ., பஷீரிடம் மனு கொடுத்துள்ளார்.
மனுவில் உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த பெரியக்காள், அவரது மகள் இந்திராணி ஆகியோரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதற்காக மாதந்தோறும் 3,000 ஆயிரம் வீதம் 54 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டோம். இருப்பினும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், கடந்த 3ம் தேதி வீட்டுக்கு வந்து அசிங்கமாக பேசி, அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனியும் பணம் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார். இதே போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கந்து வட்டி புகார்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள் நடந்த படியே உள்ளன.
கந்து வட்டி புகாரில் தஞ்சை மாவட்டத்தில் கதிரவன், மல்லிகா, பாலாஜி, ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி பகுதியில் கந்துவட்டி வசூலித்த புகாரில் வெள்ளைச்சாமி, மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.