தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 26-ம் தேதி துவங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 29-ம் தேதி இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

Special Correspondent

இதனால் சிறிய நீர்நிலைகள் நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறுகிறது. குடியிருப்புக்களில் போதிய மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், மழைநீர் கால்வாய்கள் மூலம் சென்னையின் முக்கிய ஆறுகளான கூவம் மற்றும் அடையாறு வழியே வீணாகி சென்று கடலில் கலந்து வருகிறது.

இதன் இடையே மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசின் மெத்தன போக்கால் கடந்த இரண்டு தினங்களாக, சென்னையின் முக்கிய நீர்வழிதடமான கூவத்திலிருந்து வினாடிக்கு, 6,500 கன அடி தண்ணீரும், அடையாறு ஆற்றிலிருந்து 14,000 கன அடி தண்ணீரும்,, பக்கிங்ஹாம் கால்வாயிலிரிருந்து 1,400 கன அடி நீரும் கடலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு தினங்களாக, கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய் ஆகிய மூன்று நீர்வழித்தடங்கள் மூலம் சுமார் 21 ஆயிரத்து, 900 கன அடி நீர் வீதம் மழை நீரானது கடலுக்கு சென்று வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.

2 நாள் மழைக்கே சுமார் 3.75 டி.எம்.சி நீர் வீணாகி கடலுக்கு சென்று விட்ட நிலையில், டிசம்பர் வரை தொடர உள்ள வட கிழக்கு பருவமழை முடிவதற்குள் இன்னும் பல டி.எம்.சி தண்ணீர் வீணாகும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்லவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் மந்திரிகள் படை சூழ சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் இருந்த தண்ணீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளது என்றும்...

அதிகளவில் மழை பெய்தும் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றும் . சென்னை நகரை பொறுத்த வரை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன என்றும் ., ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மழைநீர் வடிகால்கள் கட்ட ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் வடிகால் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.