சென்னையில் தொடர்ந்து 2 நாட்கள் கனமழை பெய்த நிலையில், 10 கடலோர மாவட்டங்களில் மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி பெரிய வகுப்புகட்டளை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலசுந்தரம் (47) மழையினால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். தஞ்சை அடுத்த ஒரத்தநாட்டில் விட்டு சுவர் இடிந்து தினேஷ் என்பவரும், நாகை மாவட்டம் சீர்காழியில் மின்னல் தாக்கி ராமச்சந்திரன் (54) என்பவரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அதிகபட்சம் சீர்காழியில் 309 மிமீ(30 செமீ) மழை கொட்டியது.
கொள்ளிடத்தில் 24.8 செமீ,
மணல்ேமடு 15.8 செமீ,
மயிலாடுதுறை 10.3 செமீ,
நாகப்பட்டினம் 9.5 செமீ,
கடலூர் 24.9 செமீ,
சிதம்பரம் 20.3 செமீ,
புவனகிரி 15.8 செமீ,
காட்டுமன்னார்கோவில் 14.4 செமீ,
லால்பேட்டை 13.6 செமீ,
சென்னையில் அதிகபட்சமாக தரமணியில் 19.3 செமீ, மழை விவரம்பதிவாகி உள்ளது மற்ற இடங்களில் முறையே :
சென்னை செம்பரம்பாக்கத்தில் 17.6 செமீ,பூந்தமல்லியில் 17 செமீ,
அம்பத்தூரில் 16.1 செமீ,
நுங்கம்பாக்கத்தில் 11.6 செமீ,
பெரம்பூர் 18.3 செமீ,
பொன்னேரி 15.9 செமீ,
அண்ணா பல்கலைக்கழகம் 14.2 செமீ,
மீனம்பாக்கம் 16.9 செமீ மழை பதிவானது.
சென்னை பல்லாவரம் அருகில் உள்ள அனகாபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு மின்னல் தாக்கியதில் லோகேஷ்(18), கிஷோர்குமார்(19) ஆகிய 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.இந்த நிலையில், நேற்று காலை 11 மணிக்கு மேல் சென்னையில் மழை நின்றது.
இது வரை கிடைத்த தகவலின் படி தமிழகம் முழுவதும் மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது பெய்த பலத்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதுடன், அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.