தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்ததுள்ளார்.

Special Correspondent

மேலும் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் இறந்தவர் எண்ணிக்கை 10 ஆனாது... தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனையடுத்து சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனையடுத்து மழை பாதிப்பு குறித்து தகவல் அளிக்க அவசர உதவி எண்களை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை பாதிப்புகளை 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது...