காவிரி மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஐசியூ இருப்பதால் பார்க்க இயலவில்லை என தெரிவித்தார். ஸ்டாலின் உள்ளிட்ட உறவினர்களிடம் பேசியதாக கூறினார். குலாம் நபியுடன், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
மேலும் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும் ராகுல், சோனியாகாந்தி கருணாநியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்று கூறினார். மருத்துவர்கள் மிக திறமையாக சிகிச்சை அளித்து வருவதாக குலாம் நபி ஆசாத் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் வந்து கேட்டறிந்தார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பிறவி போராளியான கருணாநிதி விரைவில் குணமடைவார் என்று உறுதியாக நம்புகிறேன் நேற்று பிரனாயி விஜயன் கூறியுள்ளார்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியின் மூலமாக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
கருணாநிதி திமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் தலைவர் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க டிடிவி தினகரன் காவேரி மருத்துவமனைக்கு சென்றார். கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் தினகரன் கேட்டறிந்தார். விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
தமிழக முதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து உழைப்பை வித்திட்டவர் கருணாநிதி என அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என்று தம்பிதுரை பேட்டியளித்துள்ளார். தமிழுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் பாடுபட்ட தமிழின தலைவர் கருணாநிதி உடல்நலம் பெறுவது அதிமுகவினருக்கும் மகிழ்ச்சியை தருகிறது என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டறிந்தார். விரைவில் அவர் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க இசையமைப்பாளர் இளையராஜா காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இளையராஜா கேட்டறிந்தார்.
தொடர்பு செய்திகள் : திக் திக் 20 நிமிடம் குவிந்த தொண்டர்கள் : திமுக