திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் விசாரித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக ஸ்டாலினிடம் மோடி பேசினார். என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தயாராக உள்ளதாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்போது சில பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது இல்லத்தில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள். நேற்று மாலையில் இருந்து அவரை அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து மோடி டிவிட் செய்துள்ளார். அதில், ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக கூறி இருக்கிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று ஸ்டாலிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராஜா மற்றும் சீதாராம் கேசரி ஆகியோரும் பேசி விரைவில் குணமடைய பிரார்த்தனை செயவதாக கூறி உள்ளார்.
மோடிக்கு பதில் அளித்த ஸ்டாலின் பிரதமர் நேரில் பேசி எந்த உதவியும் செய்ய தயார் கேளுங்கள் என்ற போதிலும் எதுவும் வேண்டாம் காவிரி மருத்துவர்கள் மீது நம்பிக்கை உண்டு என கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். மேலும் கமல்ஹாசன், ஜி.கே.வாசன், திருமாவளவன் சந்தித்து நலம் விசாரித்தனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை, வைகோ, சரத்குமார் உள்ளிட்டவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
தொடர்பு செய்திகள் : பாஜக அதிமுக ஆதரவு தந்தி டிவி கருத்துகணிப்பில் திமுக முன்னிலை