நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் பாஜக அரசு எளிதில் வெற்றி பெற்றாலும் கூட, எதிர்பார்த்த வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை.

Special Correspondent

மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தெரிய வருவது யதெனில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, வாக்கெடுப்பை புறக்கணித்தது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதனால், சிவசேனாவின் 18 எம்பிக்கள், பிஜூ ஜனதா தளத்தின் 19 எம்பிக்கள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் 11 எம்பிக்கள், அதிமுகவின் 4 எம்பிக்கள், பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் ஆகியோர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, மொத்தம் 312 எம்பிக்கள் கைவசம் உள்ளனர். ஆனால், சிவசேனா கட்சி வெளிநடப்பு செய்ததால் அக்கட்சியைச் சேர்ந்த 18 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. அதனால், 294 எம்பிக்கள் மட்டுமே கூட்டணியில் இருந்தனர். அதிமுக ஆதரவு அளித்ததால், அக்கட்சி எம்பிக்கள் 37 பேரையும் சேர்த்து, மொத்தம் 331 வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 325 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதிமுகவின் 37 எம்பிக்கள் பாஜ அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்கள் வாக்களிப்பை புறக்கணித்தது அம்பலமாகியுள்ளது.

இந்த குளறுபடி வேலையை ெசய்தவர்கள் யார் யார் என்பது, கட்சியின் தலைமைக்கு தெரிந்தும், அவர்கள் வெளியே சொல்லாமல் கமுக்கமாக உள்ளனர். கட்சியின் முடிவுக்கு எதிராக 4 எம்பிக்கள் செயல்பட்டதால், அவர்களில் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.

அதிமுக ஆட்சி தமிழகத்தில் பெரும் குழப்பத்துக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வந்தால், ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Special Correspondent

இந்நிலையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் விசாரிக்கிறார். வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்பதால், அதிமுகவின் நாட்கள் எண்ணப்படுவதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடதக்கது.

பாஜக எம்பிக்களில் விர்தல் ராட்டியா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் வெளிநாடு சென்றதால் வாக்களிக்கவில்லை. அதனால், பாஜவுக்கு 325 வாக்குகள் கிடைத்தன.

அது போலவே காங்கிரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய பிரதேச எம்பி கமல்நாத், அருணாசலப்பிரதேச எம்பி நிநாங் இரிங் ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. அதனால், 126 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தொடர்பு செய்திகள் : மத்திய அரசின் நிதி ரூ.3558 கோடி முடக்கம்: ராமதாஸ் குற்றச்சாட்டு