வாட்ஸ்அப் மூலமே பெரும்பாலும் வதந்திகள் பரப்பப்படுகவதாக புகார்கள் எழுந்தது. இதன் உண்மை தண்மையை அறிவதற்காக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் வாட்ஸ்அப் பயன்பாடு படிபடியாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறைந்த விலையில் டேட்டா பிளான்கள் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்போனில் இணையத்தை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை 10 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகர்புறங்களை விட கிராமப்புறங்களில் வாட்ஸ்அப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒராண்டில் நகர்புறங்களில் 10 சதவிகிதமும், கிராமப்புறங்களில் 16 சதவிகிதமும் வாட்ஸ்அப் பயன்பாடு உயர்ந்துள்ளது.
நகர்புறங்களில் வசிக்கும் வாட்ஸ்அப் பயனாளர்களில் 20 சதவிகிதம் பேரும், கிராமப்புறங்களில் வசிக்கும் வாட்ஸ்அப் பயனாளர்களில் 38 சதவிகிதம் பேரும் தினமும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப் பயனாளர்களில் 24 சதவிகிதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்றும் வாட்ஸ்அப் பயனாளர்களில் சுமார் 5 சதவிகிதம் பேர் 18 வயதிலிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்களில் 7 சதவிகிதம் பேர் மட்டுமே 56 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் வாட்ஸ்அப் உபயோகிப்பவர்களில் கணிசமானவர்கள் அதில் வரும் தகவல்களை நம்புகின்றனர்.
வாட்ஸ்அப் மற்றும் மூகநூல் பயன்படுத்துபவர்களில் 29 சதவிகிதம் பேர் அதில் பரப்பப்படும் தகவல்களை நம்புகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாறுபவர்களே அதை பயன்படுத்தி பரப்புரை செய்பவர்கள் மற்றும் வசந்தி பரப்புவர்களின் இலக்கு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய கிராமப்புறங்களில் கடந்த ஒரு ஆண்டில் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவுவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை கடத்த வந்ததாகக் கூறி அப்பாவிகளை தாக்குவது, பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள் உள்ளிட்டவை அண்மை காலமாக அதிகரித்து வருகிறது.
ஸ்மார்ட் போன் மற்றும் டேட்டா பிளான்களின் விலை குறைந்து வருவதால் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு செய்திகள் : தொழில் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் 15 இடத்துக்கு பின்னேறிய தமிழ்நாடு