கோவையில் மாணவி லோகேஸ்வரி எதிர்பாராத விதமாக உயிரிழந்த கலைமகள் கல்லூரிக்கு நிறுவனர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் மனைவி டாக்டர் பானுமதி தான் கல்லூரியின் தலைவர்.
இந்த தகவல் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக ஆறுமுகம் என்ற பயிற்சியாளரை பற்றி மாத்திரமே செய்தி வெளிவரும் வகையில் காவல்துறை மூலமாக மிக கவனமாக தமிழக அரசு பார்த்துக்கொள்வதாக மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவித்தனர்.
தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் இதே ஆறுமுகம் பேரிடர் மேலாண்மை பயிற்சியும்உரையும் ஆற்றியிருக்கிறார்.
இதெல்லாம் தமிழக பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமால் இவ்வளவு நாட்கள் நடந்திருக்கும் என்ற கேள்வியையும் மாணவர்கள் தரப்பு முன் வைக்கின்றனர்.
ஏதோ ஒரு வகையில் ஆறுமுகத்தை பயன்படுத்தி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விழிப்புணர்வுக்காக கொடுக்கும் பணத்தை நன்றாக ஏப்பம் விட்டுவந்த அதிகாரிகள் இப்போது பழியை மொத்தமாக ஆறுமுகம் மீதாக திணித்து வருகின்றனர். இதற்க்கு பலமாக காவல் துறையும் முடுக்கி விட பட்டுள்ளது.
அதே நேரம் யார் அவர் ? உண்மையான நபரா என்று தெளிவாக எதையும் விசாரிக்காமல் பயிற்சி கொடுக்க ஆறுமுகத்தை அழைத்த கல்லூரியின் முதல்வர்,தலைவர் ஆகியோரும் விசாரனைக்கு உட்படுத்தாமல் கைது செய்யப்படவேண்டியவர்கள் தானே என்ற கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை.
ஒருவரை பற்றி சரியாக விசாரிக்காமல் ஆறுமுகத்தை பயிற்ச்சிக்கு அழைத்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் மனைவி டாக்டர் பானுமதியின் கல்லூரி டீன் ஈமெயில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதே ஈமெயில் முகவரியில் அவரிடம் நமது சிறப்பு நிருபர் எழுப்பிய கேள்வி விரைவில் இதே தளத்தில் வெளிவரும்.
தொடர்பு செய்திகள் : பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பலி