2011 முதல் தங்களுடைய சொந்த அரசு நடைபெற்றுள்ள நிலையில், இப்போதும் நிதிச் சுமையைக் காரணம் காட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நள்ளிரவில் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அதுவும் 17 ரூபாய் டிக்கெட் எடுத்து சென்றவர்கள், இன்று காலை முதல் 33 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டிய அதிர்ச்சிக்கு ஆளாகினர். பஸ்சில் ஏறிய கூலித் தொழிலாளர்களும், வேலைக்கு செல்வோரும் பஸ் கண்டக்டர்களுடன் வாக்குவாதம் செய்த காட்சியைக் காணமுடிந்தது.
அதாவது 100 ரூபாயை வைத்துக்கொண்டு போய் வந்த இடத்துக்கு இப்போது 200 ரூபாய் தேவைப்படுகிறது. 200 ரூபாய் கூலிக்கு வேலைக்குப் போனவர்கள் இப்போது திகைத்து நிற்கிறார்கள்.
2006 முதல் அதிமுக வெற்றி பெற்ற 2011 ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி நடைபெற்றது. அந்த 5 ஆண்டுகளில் பஸ் கட்டணமோ, மின் கட்டணமோ உயர்த்தப்படவே இல்லை.
ஆனால் ஜெயலலிதா பொறுப்பேற்றதும், திமுக ஆட்சியை குறைகூறி, பேருந்துக் கட்டணத்தை 200% கடுமையாக உயர்த்தியது அதிமுக அரசு.
தற்போது மறுபடியும் இரு மடங்கு உயர்த்தியாதல் பல இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் அதிமுக அரசின் இந்த திடீர் பஸ் கட்டண உயர்வை கடுமையாக கண்டித்துள்ளன.
ஆனால், அதிமுக அரசோ, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் கட்டண உயர்வு குறைவு என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் நிறைவேற்றியதாக திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மொத்தமாக கொள்ளையடிக்கும் நிர்வாகம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது என்றும் சமுகதளத்திலே மக்கள் குற்றம் சாட்டுகிறார்க்ள்.
மேலும் எம்ஜியார் நூற்றாண்டு விழாவுக்காக இதுவரை எடப்பாடி அரசு செலவழித்த தொகை 300 கோடிக்கு மேலல் வரும் என்கிறார்கள் அரசு துறை சேர்ந்தவர்கள்...
இந்த நிலையில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மணவர்க்ளை தொடர்ந்து, தஞ்சை மகளிர் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்...
தமிழகம் முழுவதும் தீவிரமாகும் போராட்டம் கண்டு அரசு அதனை ஒடுக்கும் நிலையை மேற்கொண்டு வருகிற்து...