வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகன் கைது செய்யப்ப ட்டார். பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடிசெய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி புகார் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரவ்மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அவரை மோடி அரசு தப்ப உதவியதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் நிரவ் மோடி குழுமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்த திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. நேற்று இரவு கைது செய்தது.