அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Special Correspondent

அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் (European Geosciences Union (EGU) General Assembly) சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம் கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கூடுதல் பனி நீரின் அளவு சாக்கடலின் (Dead Sea) பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போதுமானது என்றும், 1992 முதல் கடல் மட்டம் அதிகரித்தித்தில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பணிகள் 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவில் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் இது தடுக்கப் போதுமானதல்ல என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.