ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டிச்சென்றது. இந்தியாவின் பார்க்கர் தங்கமும், ஹூனா சித்துவுக்கு வெள்ளிப் பதக்கமும் வென்று சாதித்துள்ளனர். ஹரியானவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மனு பார்க்கர் தங்கம் வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த ஹூனா சித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
பதக்கப்பட்டியலில் 6 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப்பதக்கத்துடன் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் நேற்று மட்டும் இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.
பளுதூக்குதலில் 69 கிலோ எடைப்பிரிவில் உ.பி.யை சேர்ந்த பூனம்யாதவ் தங்கம் வென்றார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் மனு பார்க்கர், ஹூனா சிந்து முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று அசத்தினர்.
பெணகளுக்கான 45-48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான 69 கிலோ பளுதூக்குதலில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பூனம்யாதவ் தங்கம் வென்று அசத்தினார். இதேபோல் சஞ்சிதா சானு, சதீஷ் சிவலிங்கம், வெங்கட் ராகுல் ரகாலா ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர். தீபக் லாதர் வெண்கலம் கைப்பற்றினார்.
மேலும் தங்கம் வென்ற பளு தூக்குதல் வீரர் தமிழர் சதீஷ் சிவலிங்கம் பற்றிய விவரம் அறிய