சென்னை தி.நகரில் இளைஞரை போக்குவரத்து போலீசார் தாக்கிய சம்பவம் குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் எஸ்.ஐ சுரேஷ், எஸ்.எஸ்.ஐ ஜெயராமன் ஆகியோருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், இளைஞர் ஒருவர் தன் தாய், சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர்கள், ஹெல்மட் அணியாத காரணத்திற்காக அந்த இளைஞரை மறித்துள்ளனர். அதில் அந்த இளைஞருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த போலீசார் அந்த இளைஞரை தரதரவென்று சட்டையை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது தன் மகனை காவலர்களிடம் காப்பாற்ற முயற்சி செய்த இளைஞரின் தாயை போக்குவரத்து காவலர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலை என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் முன்னால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தன் தாயை தாக்குவதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த இளைஞர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சட்டையை பிடித்துள்ளார்.
இதனால், மேலும் ஆத்திரமடைந்த காவலர்கள் நான்கு, ஐந்து பேர் ஒன்று சேர்ந்து, அந்த இளைஞரை நடுரோட்டில் கம்பத்தில் கட்டி வைத்து கையை முறித்து கொடூரமாக தாக்குகின்றனர். பார்ப்போர் மனதை பதபதைக்க வைக்கும் அளவிளான இந்த வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வேகமாக பரவியது.
மேலும் மூன்று பேர் செல்வது குற்றம் என்றால் சமூக வலைதளத்திலே மூன்று பேர் செல்லும் போலிசார் போட்டவை போட்டு நீதி நியாயம் எல்லாம் இளிச்சவயான் மக்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்...
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் எஸ்.ஐ சுரேஷ், எஸ்.எஸ்.ஐ ஜெயராமன் ஆகியோருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 18-ம் தேதி காலை 10.30 மணிக்கு இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்ற மாதம் முன்னாதாக உஷா என்ற பெண்மணியை போலிசார் எட்டி உதைத்து கொன்ற சம்பவம் பரபரப்பு அடங்காத நிலையில் இது நடந்து உள்ளதால்பொது மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ள்தாக சமூக அர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்...