கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் தொடக்கம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். குழந்தைகளின் உடல் நலனை மனதில்கொண்டு நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், ‘இல்லம் தேடிக் கல்வி’ பயிற்சிப் பணிமனை, மற்றும் இத்திட்டத்தில் இணையும் தன்னார்வலர்களுக்கான மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

கடலூரில் பள்ளிக்கு வராத மாணவருக்கு அடி, உதை.. ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது

சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவரை, ஆசிரியர் சுப்பிரமணியம் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் தற்போது கொரோனா பாதிப்பு 2 ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தேசியம்

ஏழை மாணவர்களுக்கு வழங்குவது அரசின் கடமை; தனியார் பள்ளிகளின் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்

ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவது அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர் ஆன்லைனில் கல்வி பயில தேவையான டிஜிட்டல் கருவிகளை டெல்லி அரசு, பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

NEP 2020 கட்டாயம் செயல்படுத்த வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகுருசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேசிய மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

நீட் தேர்வில் முறைகேடு; உச்ச நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்

நாடு முழுவதும் கடந்த 12 ஆம் தேதி நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகி முறைகேடு நடந்திருப்பதால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் மேலும் வாசிக்க …..

கல்வி கொரானா சமூகம் தமிழ்நாடு

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான வகுப்புகள், நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு தேசியம் மகராஷ்டிரா

நீட் தேர்வு மாணவர்களுக்கு நன்மையா தீமையா.. தமிழ்நாட்டை பின்பற்றும் மகாராஷ்டிரா அரசு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில அரசும் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தார். ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்ததையடுத்து, நீட் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

நீட் தேர்வின் சாதகங்களை ஏன் சொல்லவில்லை.. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!

நீட் தேர்வை விமர்சித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி, அதன் பயன்பாடுகளைச் சுட்டிக்காட்ட தவறிவிட்டது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு பயிற்சி முறை (கோச்சிங்) மாணவர்கள் மத்தியில் கற்றலை முழுவதுமாக மாற்றிவிட்டது என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்கிறேன். பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரை இது உண்மைதான். ஆனால், நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகள் வருவதற்கு முன்பாகவே பள்ளிகளில் சிறப்பு பயிற்சி முறை மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம் மருத்துவம்

நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க அறிக்கை: தமிழ்நாடு அரசு வெளியீடு

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது பாஜக மோடி அரசு. நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக மாணவர்களும், பெற்றோர்களும், கல்வியாளர்களும் தெரிவித்தும் பின்வாங்க மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு; கல்வி, விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்தக் கலந்தாய்வில் மாணவர்களுக்கு பி.இ சேர்க்கை ஆணையை இன்று (செப்டம்பர் 20 ஆம் தேதி) தமிழ்நாடு முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கினார். இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் 69% பேர் மேலும் வாசிக்க …..