அரசியல் சட்டம் தேசியம்

டெல்லி செங்கோட்டை வன்முறை: நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்

டெல்லி செங்கோட்டையில் வன்முறையை தூண்டியதாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், சிலர் டெல்லி செங்கோட்டைக்குள் சென்று அத்துமீறலில் ஈடுபட்டு, சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வன்முறையில் தொடர்புடைய 12 மேலும் வாசிக்க …..

அரசியல்

டெல்லி எல்லைகளில் குவியும் விவசாயிகள்; அப்புறப்படுத்த போராடும் காவல்துறை

டெல்லி எல்லைப் பகுதிகளான காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு வருவதால், போராட்டம் மிகப் பெரிய அளவில் தீவிரமடைந்து, போராட்டத்தைக் கலைக்க பல இடங்களில் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் அமைதியாக போராடி வந்தனர். ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டம் திசை மாறியது. டெல்லியில் நடந்த டிராக்ட்ர் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

டெல்லி செங்கோட்டை முற்றுகை; பின்னணியில் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை மற்றும் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதற்கு, நடிகர் தீப் சித்து மற்றும் ஆர்வலர் லகா சிதானா மட்டுமே காரணம் என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாட்டின் 72வது குடியரசு தினமான நேற்று (ஜனவரி 26) காவல்துறையினர் அனுமதி மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை சட்டம் தேசியம் விவசாயம்

குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி வரலாறு படைத்த விவசாயிகள்

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி 62 நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் உட்பட பல காரணங்களால் இப்போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக நடந்த மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

டெல்லியில் தேசியக் கொடியை ஏந்தி டிராக்டர் பேரணியை தொடங்கிய விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், திட்டமிட்டபடி 72வது குடியரசு தினமான இன்று (ஜனவரி 26) டெல்லியில் டிராக்டர் பேரணியை தொடங்கி உள்ளனர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஒடிசா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 62வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

அதிரும் மகாராஷ்டிரா.. மும்பையை நோக்கி 180 கி.மீ விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி

விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக சுமார் 21 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை நோக்கி 180 கிலோமீட்டர் மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர். மத்திய பாஜக அரசு புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த இரண்டு மாநிலங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 59 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 76 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். மத்திய அரசு வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற முன்வராததால், விவசாயிகள் போராட்டம் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

மத்திய அரசின் ஒன்றரை ஆண்டு வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு சலுகையை நிராகரித்த விவசாயிகள்

மத்திய அரசின் எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கமாட்டோம், வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பது தான் ஒரே கோரிக்கை என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 58 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். விவசாயிகளை போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, ஜனவரி மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்

டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா.. வேண்டாமா.. என்பதை காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 55 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்து, 4 பேர் குழுவை அமைத்தது. உச்சநீதிமன்றம் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு NIA சம்மன்- பழிவாங்குகிறதா மோடி அரசு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஞ்சாபி நடிகர் சித்து உள்ளிட்ட பலருக்கு எதிராக தேசிய புலானாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மேலும் வாசிக்க …..