சமூகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி பெண் பலி

சேலம் அருகே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள நாட்டுக்கோட்டை மேம்பாலம் அருகே கடந்த ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளார். அவரின் கார் முன்னால் டிஐஜி விரைவுப் படை வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் காரின் பின்னால் அமர்ந்திருந்த 2 பெண்கள் பலத்த மேலும் வாசிக்க …..

சமூகம்

தனது சகோதரனை உயிருடன் சவப்பெட்டியில் வைத்த கொடூரம்.. முதியவர் பரிதாப மரணம்

உயிருடன் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு மீட்கப்பட்ட முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் பாலசுப்ரமணியம் (வயது 74), அவரது சகோதரர் சரவணன் (வயது 70), அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு நியாயம் கிடைக்குமா?

காவல் உதவி ஆய்வாளரை அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் எட்டி உதைத்து மோதலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.. இதனால், சேலம் மாவட்டத்தில் 27 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் (TN மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தமிழ்நாடு

8 வழிச்சாலை அமைப்பதில் அவசரம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்; வலுக்கும் போராட்டம்

சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அவசரம் காட்டும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்தது. இதனை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் மேலும் வாசிக்க …..

அரசியல் கொரானா தமிழ்நாடு

முழு ஊரடங்கு விதிகளை கண்டு கொள்ளாமல் மகள் திருமண விழாவை கொண்டாடிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள சேலம் மாவட்டத்தில், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா தனது மகள் திருமணத்தை இன்று உறவினர்களை திரட்டி நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி.சித்ரா குணசேகரன். இவரின் மகள் சிந்து. இவருக்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பிரசாந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் முழு ஊரடங்கு சேலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க: முழுஊரடங்கு உத்தரவால் மேலும் வாசிக்க …..

அரசியல் கொரானா தமிழ்நாடு

நகரங்களில் கொரோனா பரவல் படுவேகம்- தமிழகத்தில் முடக்கப்படும் 5 மாநகராட்சிகள்

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் நகரங்களில் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிததுள்ளனர். எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், கீழ்க்கண்ட மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் கருத்துக்கள்

8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்

சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.   இதை எதிர்த்து விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் மீது இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 8 வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது மேலும் வாசிக்க …..

இயற்கை குரல்கள் சட்டம் தமிழ்நாடு தொழில்கள்

விளைநிலத்தில் பவர்கிரிட் அமைக்க தொடரும் எதிர்ப்பு விவசாய தம்பதியை போலிஸ் தாக்கியதால் பரபரப்பு

    பல்லடம் அருகே விளை நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த தம்பதியை போலீசார் இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக அடித்தி தள்ளி ஜீப்பில் ஏற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை கூட்டி உள்ளது   திருப்பூர் மாவட்டம் புகலூரில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கிலோவாட் உயர் அழுத்த மின்பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   இதற்காக மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

தமிழக அரசின் சேலம் மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். பணி மற்றும் காலியிடங்கள்: மேலாளர் : 02 கல்வித்தகுதி: இளங்கலை கால்நடை அறிவியல், பட்டய கணக்காளர் (சிஏ) ஊதியம்: கணக்கு மேலாளர் : ரூ.37,700 – ரூ.1,19,500, கால்நடை மேலாளர் : ரூ.55,500 – ரூ.1,75,700 பணி மற்றும் காலியிடங்கள்: தொழில் நுட்பவியலாளர் : 09 கல்வித்தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி, மேலும் வாசிக்க …..

Uncategorized வேலைவாய்ப்புகள்

சமூக பொதுநலத் துறையின் சேலம் அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு

சேலம் அங்கன்வாடியில் காலியாக உள்ள 1101 சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமூக பொதுநலத் துறை (Social Welfare Department) வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: அமைப்பாளர் – 316 இடங்கள் சம்பளம்: மாதம் ரூ.7700 – 24200 வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: அமைப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்க மேலும் வாசிக்க …..