உச்ச நீதிமன்றம் சட்டம் சமூகம் தேசியம்

புலம்பெயர் தொழிலாளர்களின் துயரங்களை நீக்குங்கள்: ஒன்றிய அரசு உட்பட 3 மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனா ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள், துயரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம்

கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்; உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கங்கை ஆற்றில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிதந்து கிடந்தது குறித்து உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் ஆகியவற்றிற்கு தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் 2வது அலை கட்டுக்கடங்காமல் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 3,62,727 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,37,03,665 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,120 பேர் கொரோனாவால் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

கங்கையில் மிதக்கும் 100க்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள்; மாறிமாறி குற்றம்சாட்டும் பீகார்- உ.பி. அரசுகள்

பீகார் மாநிலம் பக்சரில் கொரோனவால் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட உடல்கள் கங்கை ஆற்றின் நதிக்கரையில் கரை ஒதுங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், கொரோனா பரவும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு உத்தரபிரதேசத்தின் எல்லையிலுள்ள பீகார் மாநிலம் பக்சரில், கங்கை நதியை ஒட்டிய கிராமங்களான சௌசா, மிஸ்ரவலியா, கட்கர்வா பகுதிகளில் COVID உயிரிழப்புகள் என அறிவிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட இறந்த உடல்கள் கங்கா ஆற்றின் கரையில் கொட்டப்பட்டதால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் வீங்கிய நிலையில் உள்ள கொரோனவால் இறந்த இந்த மேலும் வாசிக்க …..

சமூகம் தேசியம் பெண்கள்

சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் விடுதலை

சட்டக்கல்லூரி மாணவி தொடுத்த பாலியல் வழக்கியிலிருந்து முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சின்மயானந்தை விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்த் (வயது 75), முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தவர். தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில், சட்ட கல்லூரி நடத்தி வருகிறார். சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிக்கு சுவாமி சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரில், மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு; உத்தர பிரதேசத்தில் தொடரும் அவலம்

உத்தர பிரதேசத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று தலித் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17, 10, மற்றும் 8 வயது கொண்ட மூன்று சிறுமிகள் தங்கள் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நுழைந்து ஆசிட் வீசி சென்றுள்ளனர். காயமடைந்த மூன்று சிறுமிகளும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

முதல்வர் யோகியின் ராம ராஜ்ஜியத்தில் தொடரும் பாலியல் வன்முறைகள்..

ராம ராஜ்ஜியத்தை கொண்டுவருவதில் தங்கள் அரசு உறுதியாக உள்ளது என்று கூறும் முதல்வர் யோகியின் மாநிலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி தொடங்கியதிலிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லஷ்மிப்பூர் கேரி என்ற பகுதியில் 13 வயசு குழந்தையின் உடல் ஆகஸ்ட் 16-ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்துக்குள் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த குழந்தையை ஒரு வெறிபிடித்த கும்பல் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபே பின்னணி..

உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை கொன்ற ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் காவல்துறையினரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி தன்னை பிடிக்க வந்த போலிஸாரை ரவுடி விகாஸ் துபே தலைமையிலான கும்பல் சுட்டதில் ஒரு டி.எஸ்.பி, 3 எஸ்.ஐ., உள்ளிட்ட 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்தப் படுகொலைச் சம்பவத்தில் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

பாஜக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் சுதந்திரம் மறுக்கப்படுகிறதா..?

பிரதமர் மோடி தத்தெடுத்த வாரணாசி தொகுதியில் மக்கள் உணவும் நிதியும் இல்லாமல் இன்னல்களில் உள்ளனர் என ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஸ்க்ரால் இதழின் பத்திரிக்கையாளர் சுப்ரியா சர்மா மீது பாஜகவின் யோகி அரசாங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட டோமரி என்ற கிராமம் பிரதமர் நரேந்திர மோடியால் சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் தத்தெடுக்கப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த மாலாதேவி ஒரு வீட்டுப் பணியாளர் என்றும், ரேஷன் கார்டு இல்லாததால் அத்தியாவசிய மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் பயணம்

ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல சைக்கிளை திருடிய உ.பி தொழிலாளி செய்த நெகிழ்ச்சி காரியம்

கொரோனா பாதிப்பைவிட, நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவதிகள், மரணங்கள் குறித்து தினந்தோறும் வெளிவரும் செய்திகளே நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ராரா என்ற கிராமத்தில் பணியாற்றி வரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர், 250 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான பரேலிக்கு செல்ல முயன்றிருக்கிறார். அதற்காக ராரா கிராமத்தில் உள்ள சாஹாப் சிங் என்ற நபரின் சைக்கிளை அனுமதியேதுமின்றி மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் பயணம்

தொடர்ந்து பலியாகும் புலம்பெயர் தொழிலார்கள்- கொரோனாவைவிட கொடுமை

உத்தரபிரதேசத்தில் லாரியில் பயணித்த புலம் பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் வேலையிழந்த ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 81 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஃபரீதாபாத்திலிருந்து கோரக்பூருக்கு லாரி மூலம் புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணியளவில் மேலும் வாசிக்க …..