JEE (JOINT ENTRANCE EXAMINATION) எனப்படும் பொறியில் படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று (பிப்ரவரி-7) தொடங்கியது.

என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்தர பொறியியல் கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு 2020 ஆண்டிற்கான JEE (MAIN) தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.

பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் JEE (MAIN) நுழைவுத்தேர்வை எழுதி தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம்.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 07-02-2020
விண்ணப்பப் பதிவு முடியும் நாள்: 06-03-2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 07-03-2020
விண்ணப்பத்தில் திருத்தம் செய்யும் நாள்: 08-03-2020 to 12-03-2020 @ 11.30pm
நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடங்கும் நாள்: 20-03-2020
தேர்வு நடைபெறும் நாள்: Between 05.04.2020, 07.04.2020 to 09.04.2020 & 11.04.2020
தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 30-04-2020

விண்ணப்பிக்கும் முறை : JEE (JOINT ENTRANCE EXAMINATION) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…