2020 ஆம் ஆண்டிற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியது.

தமிழக பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதே போல், சிபிஎஸ்இ, நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு CTET (Central Teacher Eligibility Test) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. CTET  வரும் ஜூலை மாதம் நடைபெறுகிறது.

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 24 ஜனவரி 2020
விண்ணப்பப் பதிவு முடியும் நாள்: 24 பிப்ரவரி 2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 27 பிப்ரவரி 2020
நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடங்கும் நாள்: 2௦ ஜூன் 2020
தேர்வு நடைபெறும் நாள்: 5 ஜூலை 2020
தேர்வு முடிவு வெளியாகும் நாள்: 27 ஜூலை 2020

CTET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.