ஆன்மிகம் சமூகம்

சபரிமலைக்கு இனி ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி

கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக பம்பா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சேதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நவம்பர் மாதம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கவும் கேரள காவல்துறை மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பம்பா பகுதியின் கட்டுமானத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மாநிலக் காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா, கேரள முதல்வர் பிணராய் விஜயனுடன் கலந்தாலோசித்தார். அப்போது மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் சமூகம் வேலைவாய்ப்புகள்

நீட் தமிழ் தேர்வு வினாத்தாள் குளறுபடி கூடுதல் 196 மதிப்பெண்கள் கிடையாது : உச்சநீதிமன்றம்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்புடன் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சமூகம்

சுங்கச்சாவடிகளில் தனி வழியில் நீதிபதிகள் அனுமதிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள சுங்கச்சவாடிகளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிலுவை சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்றும், வாகனங்களில் நீதிபதிகளுக்கான சின்னம் இருந்தும், ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரக்குறைவாக நடப்பதாக கண்டனம் தெரிவித்தனர். மேலும், சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மேலும் வாசிக்க …..

கருத்துக்கள் தேசியம்

சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளிகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் : மோடி

ஒழுக்கமான சமூகத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும், சமூக வலைத்தளங்கள் மூலமாக புரளிகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தனது மக்களவைத் தொகுதியான வாரணசிப் பகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடையே விடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய பிரதமர் மோடி, நம்மைச் சுற்றி ஏராளமான நல்ல விஷயங்கள் இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் நம் மூலமாக தவறான விஷயங்கள், புரளிகள் பரப்புவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவில் உள்ள 125 மேலும் வாசிக்க …..

சட்டம் சமூகம்

ஒரே ஒரு எலியால் 32000 ரூ ரயில்வேக்கு நஷ்டம்

சேலம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு, ரயில்வே நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் வாழப்பாடி அருகில் உள்ள நீர்முள்ளிக்குட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40). பா.ம.க. பிரமுகரான இவர் கடந்த 2014 ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.ஆத்தூர் பகுதியில் ரயில் சென்ற போது, அவரது வலது கையை எலி ஒன்று மேலும் வாசிக்க …..

சமூகம் வாழ்வியல்

இனி பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய அரசு கண்டிப்பு

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், அவர்கள் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வலியுறுத்தியது. அதை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதனால் சமீப காலங்களில் பல மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள்

திமுகவின் தலைவர் பொறுப்பு என்பது தென்றலை தீண்டுவதல்ல ..

கட்டுரை ஆசிரியர் : ஶ்ரீனிவாசன் – Surya Born to Win கலைஞரின் குடும்பத்தில் இருந்ததால் தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இவ்வமைப்பின் மூலம் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள்

தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்த நான் தீவிரவாதியா : திருமுருகன் காந்தி உருக்கம்

யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் அளவுக்கு தாம் என்ன தீவிரவாதியா என்று தமிழக போலீசுக்கு மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிபதி கூறிய பிறகும் கூட தமக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூரில் இருந்து அழைத்துவரப்பட்ட தம்மை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் சித்ரவதை செய்வதா என்றும் திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் சிறையில் இருந்து சென்னை ஆலந்தூர் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட போது அவர் பேட்டியளித்துள்ளார். மேலும் வாசிக்க …..

சமூகம்

கல்வி ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் தமிழக அரசு பணியிட மாற்றத்தின் பிண்ணனி

நேர்மையான, திறமையான அதிகாரிகள் அரசுக்கு வேண்டாமாம்: உதயச்சந்திரன் பணியிட மாற்றம் udhayachandran தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய புரட்சியைப் படைத்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரனை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. பள்ளி துவங்கும் போதே பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தது, தேர்வுக்கு முன்பே தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அறிவித்தது முதல் பாடத் திட்டங்களை மிகச் சிறப்பான முறையில் மாற்றியமைக்க வழி வகை செய்தது வரை தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய மாறுதலை மேலும் வாசிக்க …..

சமூகம் வணிகம்

கல்லூரி மாணவர்கள் சாப்பாடு விஷயத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

சமீபத்தில், தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மொபைல் போன் உபயோகிப்பதற்கு தடைவிதித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போதைய இளைஞர்களுக்கு இணையதளம் தான் எல்லாமே என்று இருக்கும் பட்சத்தில் செல்போனுக்கு தடை விதித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த அதிரடியாக பீசா, சிப்ஸ், பர்கர் போன்ற நொறுக்கு தீனி வகைகளை கல்லூரிகளில் விற்பதற்கு மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. பாஜக கட்சி ஆட்சி மோடி அமைச்சகத்தின் தற்போதைய உத்தரவு கல்லூரி மாணவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. மானவர்கள் மேலும் வாசிக்க …..