அரசியல் தேசியம்

மோடியின் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராக டிரெண்டான #GobackModi

பிரதமர் மோடியின் பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசார வருகைக்கு எதிராக சமூக வலைதளத்தில் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டாகி பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, முதல் கட்ட தேர்தல், அக்டோபர் 28ந்தேதி 71 தொகுதிகளுக்கும், 2வது கட்ட தேர்தல் நவம்பவர் 3ந்தேதி 94 தொகுதிகளுக்கும், 3வது கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. வாக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

பிரதமர் மோடி பேச்சுக்கு இவ்வளவு டிஸ்லைகா.. அதிர்ச்சியில் பாஜக

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ அதிக டிஸ்லைக்குகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த பாஜக டிஸ்லைக் பட்டனை ஆப் செய்து விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 20) மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில், ஊரடங்கு முடிந்து பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இந்தியாவில் திருவிழா காலம் என்பதால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கலாம். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வளர்ந்து மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு; பஞ்சாப் மாநில பாஜக பொதுச்செயலாளர் ராஜினாமா

பாஜக மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில பாஜக பொதுச்செயலாளர் மால்விந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்பை மீறி, மத்திய பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர் மேலும் வாசிக்க …..

கொரானா தேசியம்

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன- ட்ரெண்டான ராகுல் ட்வீட்

கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 – 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 10.3% குறைய வாய்ப்புள்ளது என சர்வதேச நிதியகம் தெரிவித்துள்ளது. மேலும், சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு மேலும் வாசிக்க …..

கருத்துக்கள் சமூகம் தேசியம்

பணமதிப்பிழப்பு திட்டம் போலவே ‘சொத்து அட்டை’ திட்டமும் தோல்வியில் தான் முடியுமா..

பிரதமர் மோடி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்து கள்ள பணத்தை மற்றும் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்றால் .. ஆனால் அது படு தோல்வியில் முடிந்தது என்பதை நாம் அறிவரும் அறிந்ததே ..   பின்னர் மீண்டும் ‘சொத்து புத்தகம்’ திட்டத்தை அமல்படுத்த தீவிரமாக முயன்றார். பினாமி பெயர்களில் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை கண்டுபிடிப்பதற்காக இத்திட்டம் வகுக்கப்பட்டது.   இதன்படி, மக்கள் தங்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்களை தாமாகவே முன்வந்து, அரசிடம் தெரிவித்து மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள்

ஜிஎஸ்டி ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய அலைபேசி மூலம் புது வசதி

சரக்கு மற்றும் சேவை வரி கணக்குத் தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில் மொபைல் போனில் குறுந்தகவல் வாயிலாக, ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   சரக்கு மற்றும் சேவை வரிசெலுத்த மாதந்தோறும் ஜிஎஸ்டிஆர் 1 மற்­றும் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவங்கள் தாக்கல் செய்­யப்படுகின்றன.   இதில் ஜிஎஸ்டிஆர் – 3பி படிவத்தை மாதம்தோறும் 20ம் தேதிக்குள், தாமதக் கட்டணம் இன்றி தாக்கல் செய்யலாம்.   இந்நிலையில் தற்போது, ஜிஎஸ்டி கணக்குத் மேலும் வாசிக்க …..

தேசியம் வாழ்வியல்

இந்தியாவின் சராசரி 1.67 % ஆனால் உத்திரபிரதேச சிறைகளின் 38 % முதுகலை பட்டதாரிகள் சிறைகளில் இருக்கும் வினோதம்

கடந்தாண்டு நிலவரப்படி நாடு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகம் படித்த கைதிகளின் விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது அதன்படி சில முக்கிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை தந்துள்ளது . 10 லட்சம் வாசகர்கலை பெற்ற உங்கள் இரு மொழி  தமிழ் ஸ்பெகோ பெற்ற தகவல்களை உங்களுடன் பகிருகிறது இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 கைதிகளில், 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள், 1.2 சதவீதம் பேர் இன்ஜினியர்கள். நாடு முழுவதும் மேலும் வாசிக்க …..

குரல்கள் தேசியம் பாராளுமன்றம் வடமாநிலம்

இந்தியாவில் பற்றி எரியும் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் முறையீடு

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மசோதாக்கள் மீது டிவிசன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். கூச்சல், குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலமாக மேலும் வாசிக்க …..

ஐரோப்பா தேசியம் தொழில்கள் வடமாநிலம் வணிகம்

இந்தியாவில் இனி சந்தையில் துப்பாக்கிகளா – மாஸ் தயாரிப்பில் ‘வெப்லி அண்ட் ஸ்காட்’

இதுவரை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலை மட்டுமே கைத்துப்பாக்கிகளை தயாரித்து வந்தது.   1790ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வெப்லி அண்ட் ஸ்காட்’ இங்கிலாந்தின் பழம்பெரும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான, இதன் தயாரிப்பு ஆயுதங்கள் இரண்டு உலகப் போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.   தற்போது இந்த வெப்லி அண்ட் ஸ்காட் இந்தியாவின் வருகை காரணமாக கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பை தாங்கள் வழங்கப் போவதாகவும் வெப்லி அண்ட் மேலும் வாசிக்க …..

உலகம் சீனா தேசியம்

லடாக் எல்லை பிரச்சனையால் 118 சீன செயலிகள் தடை – மத்திய அரசு அதிரடி

லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிப்பதாக அறிவித்தது மத்திய அரசு. இந்நிலையில் தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் பப்ஜி கேமை விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகள் தடைக்கு காரணம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மேலும் வாசிக்க …..