மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் ஹர்ஷ் வர்தனை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி குறித்து எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச யோசனைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் மேலும் வாசிக்க …..
ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர் பயணம்; நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் செல்ல படையெடுப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒருநாள் கொரொனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மேலும் வாசிக்க …..
தீவிரமாக பரவும் கொரோனா 2வது அலையின் புதிய அறிகுறிகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்
இந்தியாவில் தற்போது வேகமாக பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு புதிய அறிகுறிகள் காணப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை தற்போது தீவிரத் தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. மராட்டியம், டெல்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநில மேலும் வாசிக்க …..
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்; தேசிய அளவில் டிரெண்டான #ResignModi
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று #ResignModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாகவும், மேலும் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மத்திய அரசு அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் மேலும் வாசிக்க …..
PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-2021
PFC நிறுவனத்தில் Director(Commercial) பணியிடங்களுக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. முகவரி : Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003. பணி : Director(Commercial) கடைசி தேதி : 16-04-2021 காலியிடங்கள் : 1 பணியிடம் : டெல்லி, இந்தியா சம்பளம் : ரூ.7,250/- முதல் ரூ.2,18,200/- கல்வித்தகுதி : MBA தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி மேலும் வாசிக்க …..
போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.6.84 கோடி கடன் பெற்ற புகார்; லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கடன் வாங்க போலியான ஆவணங்கள் வழங்கிய புகாரில், நடிகர் ரஜினிகாந்த் மனைவிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில், லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா இயக்கிய படம் கோச்சடையான். மீடியா ஒன் குளோபல் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. கோச்சடையான் படத் தயாரிப்பில் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் கடன் வாங்க முயற்சி மேற்கொண்டது. இதற்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி மேலும் வாசிக்க …..
டெல்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லியில் முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா என்பதில் மேலும் வாசிக்க …..
தேர்தல் பரப்புரைக்காக ஆதார் தகவல்களைப் பயன்படுத்திய சர்ச்சையில் பாஜக- மறுக்கும் UIDAI
புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதார் தகவல்களை பாஜக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் அளித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது சொந்த பின்னணி விவரங்களை புதுச்சேரி பாஜக கட்சி பெற்று அதன் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டைக்காக கொடுத்த விவரங்கள் எப்படி மேலும் வாசிக்க …..
சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் விடுதலை
சட்டக்கல்லூரி மாணவி தொடுத்த பாலியல் வழக்கியிலிருந்து முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சின்மயானந்தை விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்த் (வயது 75), முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தவர். தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில், சட்ட கல்லூரி நடத்தி வருகிறார். சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிக்கு சுவாமி சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரில், மேலும் வாசிக்க …..
இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) சென்னையில் வேலைவாய்ப்பு 2021
இந்திய தொழில்நுட்பக் கழகம்(IIT) சென்னையில் பல்வேறு பணியிடங்கள் வெளியிட்டுள்ளன. முகவரி : இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian Institute of Technology Madras), சென்னை-600 036, தமிழ்நாடு பணி 1 : Junior Executive கடைசி தேதி : 31-03-2021 காலியிடங்கள் : 1 பணியிடம் : சென்னை, தமிழ்நாடு சம்பளம் : ரூ. 18,000/- கல்வித்தகுதி : 55% மதிப்பெண்களும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களும் கொண்ட அறிவியல் / கலை / மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் மேலும் வாசிக்க …..