ஆசியா ஐரோப்பா சட்டம் தொழில்கள்

வைர ஊழல் மோசடி பேர்வழி மோடியை சிறையில் அடைத்தது லண்டன் நீதிமன்றம்

வங்கிக் கடன் மோசடியில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.   வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.   மேலும் வாசிக்க …..

சட்டம் வணிகம்

5 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ செம்மரக் கட்டை பறிமுதல்

சென்னை அடுத்த மாதவரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதவரத்தில் உள்ள அரசு கிடங்கில் இருந்து செம்மரக் கட்டைகள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ராஜேஷ் மற்றும் பூபதி என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மீஞ்சூர் பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலும் வாசிக்க …..

அறிவியல் தொழில்நுட்பம் வர்த்தகம்

5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்கள் அடுத்த மாதம் இந்தியாவுக்கு பராக்

சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் 5ஜி வசதியுடன் கூடிய மொபைல் போன்களை தயாரித்துள்ளன. அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10(Galaxy S10) மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப மாநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டாலும் இன்னும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான விற்பனையை தொடங்கவில்லை. இந்த நிலையில், 5ஜி கேலக்ஸி எஸ்10 மாடல் ஸ்மார்ட்போனானது வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மேலும் வாசிக்க …..

ஆசியா ஐரோப்பா சட்டம் தொழில்கள் வர்த்தகம்

தூங்கிய பாஜக அரசை விழிக்க செய்த லண்டன் பத்திரிகை முயற்சியால் சிக்கும் நிரவ்மோடி

வைர வியாபாரி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் சுமார் 40 ஆயிரம்  கோடிகள்  கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை.  தொழிலதிபர் விஜய் மல்லையாவை போல், இவர்களும் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினர்.  நீரவ் மோடி மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் நிதி மோசடி சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் மேலும் வாசிக்க …..

தொழில்கள் வணிகம் வர்த்தகம் வாழ்வியல்

திவலாகும் அனில் அம்பானி தம்பியை காப்பற்றிய முகேஷ் அம்பானி அண்ணன்

ரூ.450 கோடி தந்து உதவி, எரிக்ஸன் வழக்கிலிருந்து சிறை செல்லாமல் காப்பாற்றிய தனது அண்ணன் முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானி தனது நன்றி தெரிவித்துள்ளார். ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் எரிக்ஸன். இந்த நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது.  இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு தொழில்கள்

குறைந்த வட்டி ஆசை காட்டி நூதனமாக  கோடிகளில் அபேஸ்

சென்னையில் 10க்கும் மேற்பட்ட போலி BPO நிறுவனங்களை தொடங்கி தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பல் கடந்த பிப்ரவரி 14ம் தேதி போலீசாரிடம் சிக்கியது.    மேலும் 300க்கும் மேற்பட்ட டெலிகாலர்ஸ் மூலம் குறைந்த வட்டிக்கு வங்கி கடன் என ஏமாற்றி மோசடியில் ஈடுப்பட்ட அந்த கும்பலின் கோபிகிருஷ்ணன் உட்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.    251 ரூபாய்க்கு போன் என்று பாஜக தலைவரும்  முன்னாள் மந்திரி மேலும் வாசிக்க …..

அமர்வு நீதிமன்றம் தொழில்கள் மருத்துவம் வர்த்தகம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.74.5 லட்சம் இழப்பீடு தர அபராதம்

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.74.5 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.   ஆனால், சிகிச்சைக்கு பிறகு அவருக்கு உடல் நிலையில் பல்வேறு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. மருத்துவ ரீதியாக தீர்வு கிடைக்காததால், வழக்கு தொடர்ந்தார். ஜான்சன் நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் மேலும் வாசிக்க …..

வணிகம்

மோடியுடன் முரண்பட்ட ரிசர்வ வங்கி : பணமதிப்பு நீக்கம் விவாகரத்தில் புதிய சர்ச்சை

பணமதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவாது என ரிசர்வ் வங்கியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும், மத்திய அரசின் கருத்துக்கு சில இயக்குநர்கள் உடன்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.   அவற்றை பெட்ரோல் பங்க், மருத்துவமனை, மின்சார கட்டணம் உட்பட 23 மேலும் வாசிக்க …..

தொழில்கள் வர்த்தகம்

உலகத்தில் ராணுவ ஆயுதங்கள் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா

உலகளவில் ராணுவ தளவாட பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இறக்குமதி 24% குறைந்துள்ளது.   ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் 2018ம் ஆண்டுக்கான ஆயுத இறக்குமதி குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   இந்த ஆய்வறிக்கை 5 ஆண்டு மதிப்பீட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையில், ஆயுத இறக்குமதியில் உலகளவில் 12% மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா உலகம் பயணம் வர்த்தகம்

இந்தோனேசியா எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி : இந்தியாவிலும் போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை

    எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்து எதிரொலியாக, இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த ரக விமானங்களின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்படுகிறது.   ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 12 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களும், ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திடம் 5 விமானங்களும் உள்ளன.   இதுதொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, விமானப் போக்குவரத்து தலைமை மேலும் வாசிக்க …..