அரசியல் சட்டம் சமூகம் தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை துவங்க எதுவாக எதிர்ப்பாளர்களில் மேலும் 2 பேரை அதிகாலையில் கைது

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன், மைக்கேல் தனிஸ் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.   முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை எதிர்த்து வரும் சமூக செயல்பாட்டாளர் சந்தோஷ் என்பவர் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் கைது செய்யப்பட்டார்.   அதிமுக ஆட்சியில் போலீசாரின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய கொட்டும் பனியிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.   இதில் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சமூகம்

ஹெல்மெட் வழக்கில்  பணிந்தார் அதிமுக அமைச்சர் நீதிமன்றத்திடம் உறுதிமொழி

அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிட்டேன். இனி அப்படி நடக்காது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.   விழிப்புணர்வுப் பிரசாரத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு பொறுப்பேற்கும் விதமாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.   இதையடுத்து, இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விழிப்புணர்வுப் பிரசாரத்துக்குச் செல்லும் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் சமூகம் தேசியம் விளையாட்டு

லஞ்சம் புகார் எதிரொலி இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உட்பட 6 பேர் கைது

  லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குனர் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஊழல் நடந்துள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் பொது இயக்குனர் புகார் அளித்தார்.   அதில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் நிலுவையில் உள்ள ரூ.19 லட்சம் கட்டணத் தொகையை வழங்க 3 சதவீதம் கமிஷன் கேட்டதாக சி.பி.ஐ. யிடம் புகார் கொடுத்துள்ளார்.   இது குறித்து விசாரிக்க உரிய அமைப்புகளை வேண்டி இருக்கிறோம் என்றும் கூறி இருந்தார். மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சமூகம் தேசியம் வாழ்வியல்

உயர்சாதி பிரிவினருக்கு பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடு எதிர்த்து திமுக வழக்கு

8 லட்சம் வரைக்கும் வருடாந்திர வருமானம் உள்ள உயர்சாதி பிரிவினருக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்து உள்ளது   பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   பா.ஜ.க ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட பிற்படுத்தப்பட்டோர் 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு 10% இட ஒதுக்கீடு என மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் வட கிழக்கு மாநிலங்கள்

ரத யாத்திரைக்கு  “நொ” சொன்ன உச்நீதிமன்றம் அமித்ஷா ஆசை நிராசை

பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளிப்பது குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி,   மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பா.ஜனதா கட்சி முடிவு செய்தது.   இதற்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் தேசியம்

சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்தது உயர்நீதிமன்றம்

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மத்திய நிதியமைச்சராக முன்பு ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ரூ.305 கோடி முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.   இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2017 ம் ஆண்டு மே மாதம்  ப.சிதம்பரம் ,கார்த்தி சிதம்பரம், இந்திராணி மேலும் வாசிக்க …..

அமர்வு நீதிமன்றம் அரசியல் தமிழ்நாடு

கொடநாடு தொடர் மரண வழக்கு : நீதிபதி சரமாரி கேள்வி , சயன், மனோஜை சிறையில் அடைக்க மறுப்பு

முதல்வர் எடப்பாடி மீது கொலைப் புகார் கூறியதால் சயன், மனோஜை போலீசார் கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் சயன், மனோஜை ஆஜர்படுத்திய போலீசாரிடம் நீதிபதி சரமாரி வினா எழுப்பினர்.   உங்கள் தரப்பு வழக்கறிஞர் யார்? என்று சயன், மனோஜிடம் நீதிபதி சரிதா கேள்வி எழுப்பினார்.   அதர்க்கு அவர்கள் டெல்லியில் இருந்து வழக்கறிஞர் வாதாட வருவதாக நயன், மனோஜ் பதில் அளித்தனர்.   கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் சமூகம் தேசியம்

தொய்வடையும் சிபிஐ , முடிவு எடுக்கா மத்திய அரசு நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மத்திய அரசில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அரசியல் சட்டம் வடமாநிலம் வாழ்வியல்

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்

ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்ட வடிவம் பெற்றுள்ள வருமானத்தில் நலிந்த உயர் சாதி பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குஜராத்தில் நாளை முதல் அமல்படுத்தப்படும் என முதல் மந்திரி விஜய் ருபானி அறிவித்துள்ளார்.   முன்னதாக மே 1, 2016 அன்று அதாவது குஜராத் சட்ட மன்ற தேர்தலுக்கு 3 மாதங்கள் முன்பு, ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாய்வரையுள்ள உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு என அவசர சட்டத்தை பிறப்பித்தது குஜராத் அரசு.   ‘இது அரசியலமைப்பு மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வீடியோ விவகார வழக்கில் ஷயான் மனோஜ் ஆகியோரை கைது செய்தது தமிழக போலிஸ்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை மற்றும் பணத்தை  கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் டிரைவர் கனகராஜ் , தனது மனைவி , 3 வயது குழந்தை  உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று  ஷயான் நேற்று முன்தினம் டெல்லியில் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்தார்.   மேலும், கோடநாடு கொள்ளை, கொலை தொடர்பான ஆவணப் படத்தையும் வெளியிட்டு, பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். இது தமிழக அரசியலில் பெரும் மேலும் வாசிக்க …..