கேளிக்கை சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- கோபத்தில் கீர்த்தி சுரேஷ்

ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ரஜினியை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தில் தனக்கு வாய்ப்பு தராததால் முருகதாஸ் மீது நடிகை கீர்த்தி சுரேஷ் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சர்கார்’. மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திலும் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் அது தற்போது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இயக்குனர் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

கவிஞர் வைரமுத்து மீது பாடல்கள் திருட்டு குற்றச்சாட்டு

96 பட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து மீது கார்த்திக் நேத்தா, திருட்டுப் புகார் கூறியிருப்பது திரை உலகில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி பிரபலமான 96 படத்திற்குப் பாடல்கள் எழுதியவர் கார்த்திக் நேத்தா. அப்படத்தின் பாடல்கள் பாராட்டைப் பெற்றதால் அனைவரது கவனத்தையும் பெற்ற கார்த்திக், தற்போது பல படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இளம் பாடலாசிரியரான இவர், கவிஞர் வைரமுத்து மீது திருட்டுப் மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் கேளிக்கை சமூகம் வாழ்வியல் விளையாட்டு

அசத்திய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையொட்டி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.   இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதலே அலங்காநல்லூருக்கு காளைகள் கொண்டு வரப்பட்டன.   மேலும் மாடுபிடி வீரர்களும் அங்குள்ள வாடிவாசல் பகுதியில் திரண்டனர். காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

‘பெரியாா் குத்து’ பாடலுக்காக நடிகா் சிம்புவுக்கு பாராட்டு, விருது

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் “பெரியார் குத்து” பாடலை வெளியிட்ட நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் விருது வழங்கப்பட்டது. தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை திராவிடா் திருநாளாக திராவிடா் கழகம் சாா்பில் கொண்டாடப்பட்டது. சென்னை வேப்பரி பெரியாா் திடலில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பெரியாா் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, நடிகா் சிம்பு, பாடலாசிரியா் மதன் காா்க்கி உள்பட பலரும் இந்த மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி

மும்பையில் கோடியில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்தியாவின் முதல் சினிமா அருங்காட்சியகம் ரூ. 140 கோடி செலவில் நாளை மும்பையில் திறக்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 19ம் நூற்றாண்டு அரண்மனையான குல்ஷன் மஹால் மற்றும் ஒரு கட்டிடம் என்று 2 கட்டிடங்களில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சினிமா வளர்ச்சி அடைந்த வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

விஸ்வாசம் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்த தமிழக காவல்துறை துணைஆணையா்

அண்மையில் வெளியான விஸ்வாசம் படத்தில் நடிகா் அஜித் சமூக பொறுப்பை உணா்ந்து சாலை விதிகளை மதிக்கும் வகையில் படக்காட்சிகளில் நடித்திருப்பதாக காவல்துறை துணைஆணையா் சரவணன் பாராட்டு தொிவித்துள்ளாா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி நடிகா் ரஜினிகாந்தின் பேட்ட, நடிகா் அஜீத்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வந்தன. இரு படங்களின் விமர்சனம் மற்றும் வசூல் தொடர்பாக நோ்மறையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நடிகா் அஜீத்தின் விஸ்வாசம் படம் குடும்பத்துடன் சென்று பாா்க்கக்கூடிய வகையில் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

“கண்ணே கலைமானே” படத்தைப் பார்த்து கண் கலங்கிய விஜய் சேதுபதி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள “கண்ணே கலைமானே” படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. மீண்டும் இவர் விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ படத்தையும் எடுத்து வருகிறார். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைய்த்து தயாரித்துள்ளார். மாமனிதன் படப்பிடிப்பு தேனியில் பரபரப்பாகப் நடக்கிறது. இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கண்ணே கலைமானே படத்தின் டிரெய்லர் அண்மையில் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

என்.ஜி.கே படகுழுவினருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசளித்த நடிகர் சூர்யா

“என்.ஜி.கே” படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இணை இயக்குநர்கள் முதல் டீ பாய்வரை மொத்த படகுழுவினர் சுமார் 130 பேருக்கும் 1040 கிராம் (1.04 கிலோ) தங்க நாணயங்களை சூர்யா பரிசளித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘என்.ஜி.கே’. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பரீத், சிங், சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு ஜனவரி 12-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் குழு, மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

ஸ்ரீதேவி பங்களாவில் நடிகை பிரியா வாரியர் சர்ச்சை

‘தி அடார் லவ்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர். இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியில் தன் கண் சிமிட்டல் மூலமாக இணையத்தில் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகை பிரியா வாரியர் தற்போது நடித்துள்ள “ஸ்ரீதேவி பங்களா” என்ற பாலிவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. “ஸ்ரீதேவி பங்களா” படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கணவர் போனி கபூர் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

நடிகையுடன் திருமணத்தை உறுதி செய்த நடிகர் விஷால்

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஷால் உறுதி செய்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன். சண்டைக் கோழி, திமிரு, மலைக்கோட்டை ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். நடிகர் விஷால், கோலிவுட் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் மேலும் வாசிக்க …..