இயற்கை சுற்றுச்சூழல்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல இடங்களில் வெயில் கொளுத்தும்

தென் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த  24 மணி நேரத்தில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி மேலும் வாசிக்க …..

அமெரிக்கா இயற்கை பெண்கள் வாழ்வியல்

அமெரிக்க பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். 470 கோடி பேரில் ஒருவருக்கு இந்த அதிசயம் நிகழ வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் தெல்மா சியாகா. இவர் டெக்சாஸில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சியாகாவுக்கு அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தன. 9 மணி நேர இடைவெளியில் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

ஏற்காடு மலைப்பாதையில் 5வது நாளாக தீ ..

ஏற்காடு மலைப்பாதையில் பற்றி எரியும் தீ 99.9 சதவீதம் அணைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதால் ஏற்காட்டிற்கு செல்லும் பாதை இன்று திறக்கப்படுமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது.   சேலம் ஏற்காடு மலையில் கடந்த 22ம் தேதி முதல் தொடர்ந்து 5வது நாட்களாக காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. இதில் 60 ஹெக்டேர் அளவுக்கு செடி, கொடி, மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.   இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறை, தீயணைப்பு மற்றும் கிராம குழுவை மேலும் வாசிக்க …..

கர்நாடகா சமூகம் சுற்றுச்சூழல் வர்த்தகம்

300க்கும் மேற்பட்ட கார்கள் கருகி  சுமார் 100 கோடி நாசம்

பெங்களூரு எலகங்காவில் நடந்துவரும் விமான கண்காட்சியின் போது வாகனம் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 300க்கும் மேற்பட்ட கார்கள் கருகி நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.   இது சதி வேலையா என்று விசாரணை நடந்து வருகிறது.பெங்களூரு எலகங்காவில் இரண்டாண்டுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி சாகச நிகழ்ச்சிகள் நடக்கும். அதன்படி இவ்வாண்டு பிப்ரவரி 20ம் தேதி கண்காட்சி துவங்கி நடந்து வருகிறது.   இக்கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.   மேலும் வாசிக்க …..

இயற்கை உணவு தமிழ்நாடு

கஜாபுயல் பாதிப்பு எதிரொலி கால்நடைகளுக்கு கடும் தீவன தட்டுப்பாட்டில் புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கடும் தீவன தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் கால்நடை வளர்ப்போர் கேரள மாநிலத்திற்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் அபாயம் உள்ளது.   புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் கால்நடை வளர்ப்பு இருந்து வருவதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுக்கோட்டையில் சந்தை நடை பெறும். இந்த சந்தையில் கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வரப்படும் ஆடு, மாடுகளை விற்பனை செய்வார்கள்.   இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வியாபாரிகள் புதுக்கோட் டையில் ஒவ்வொரு வாரமும் வட்டமடித்து மேலும் வாசிக்க …..

உணவு குரல்கள் சமூகம் சுற்றுச்சூழல்

அரசு அதிகாரிகள் அலட்சியம் 20000 நெல் மூட்டைகள் நாசம்

அதிமுக அரசின் அலட்சியத்தால் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன.   திடீரென பெய்த மழையால் விற்பனைக்காக கொடுவரப்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன   இதனால் அப்பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை சாதித்து காட்டிய தமிழக வழக்கறிஞர்கள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்த முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது.   இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த சிறப்பு உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.   இதை மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

டாப்சிலிப் முகாமுக்கு சென்றதால் முடிவுக்கு வந்த சின்னதம்பியின் 19 நாள் பரபரப்பு

உடுமலையில் 19 நாட்களாக வலம்வந்த சின்னதம்பி யானை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இந்த யானை, டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.   கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியில் சின்னதம்பி காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யாைனயை கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.   பின்னர் டாப்சிலிப் வரகளியாறு வனத்தில் விடுவிக்கப்பட்டது. சின்னதம்பி கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இதன்மூலம் அதன் நடமாட்டம் வனத்துறை அலுவலகத்தில் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை குரல்கள் சுற்றுச்சூழல்

அரசு அறிவித்த 2000 ரூபாய் வேண்டாம் : பட்டாசு தொழிலாளர்கள் கடும் கோபம்

இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தி செய்யப்படும் ஒரே இடம் சிவகாசி. பட்டாசு உற்பத்தி தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.   பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சிவகாசியில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மூடப்பட்டன.   விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மூடப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் எனக்கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் இரண்டாவது மேலும் வாசிக்க …..

இயற்கை ஐரோப்பா சுற்றுச்சூழல் பயணம்

20,000 வட துருவ கடற்பறவைகள் மர்ம மரணத்தின் காரணம் என்ன ..

வடக்கு ஹாலந்து கடலோரங்களில் இருந்து சமீப நாட்களில், இறந்த நிலையில் சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.   நெதர்லாந்து கடேலோரம் நெடுக சுமார் 20,000 வட துருவ கடற்பறவைகள் சமீப வாரங்களில் இறந்துள்ள மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.   கடந்த ஜனவரி மாதம் புயலில் சிக்கிய பனாமா நாட்டு கொடியோடு பயணித்த கப்பலில் இருந்து சுமார் 345 கொள்கலன்கள் கடலில் விழுந்ததால் மேலும் வாசிக்க …..