அரசியல் வாக்கு & தேர்தல்

அறிவித்த 4 நாளிலே வேட்பாளர் முருகனுக்கு அதிமுக அல்வா கொடுத்தது ஏன் ..

பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக மயில்வேல் போட்டியிடுவார் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதேபோன்று, தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது.  அதிமுக சார்பில் 20 மக்களவை மேலும் வாசிக்க …..

அரசியல் வேலைவாய்ப்புகள்

ஊரக பகுதியில் மட்டும் மோடி ஆட்சி காலத்தில் 4.3 கோடி வேலை இழப்பு 

  இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை குறித்த ஆய்வு ஒன்றை மோடி தலைமையிலான பாஜக  அரசு வெளியிடாமல் புதைத்துவிட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது  மேலும் ஆய்வு முடிக்கப்பட்டு இந்திய அரசால் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின், குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை குறித்த தரவுகள் குறித்து பார்த்தோம் என்றால்  ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. நகர பகுதிகளில் 2017-18 தரவுகளின்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஆண்களின் எண்ணிக்கை மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் வடமாநிலம்

“நாட்டு மக்களுக்கு உணவுதான் தேவை துப்பாக்கியல்ல” அகிலேஷ் யாதவ் மோடி மீது பாய்ச்சல்

புல்வாமா தாக்குதல் குறித்து குற்றம் சாட்டிய அகிலேஷ் யாதவ் மத்திய அரசு தானே ராணுவம்போல செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.   ட்விட்டர் தளத்தில் தற்போது கடும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய அரசு ராணுவத்தை பகடைக்காயாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.   சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், ”புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமே தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம்

அது ஜெயலலிதாவின் கைரேகையே இல்லை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.  கடந்த 2016ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஏ.கே.போஸ் மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

தன் மகனுக்கு ராஜன் செல்லப்பா சீட் பிடித்தது எப்படி விவரிக்கும் அதிமுக மசெக்கள்

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்ப தற்காகவும் மா.செ.க்கள் மற்றும் கட்சியின் சீனியர்களுடன் 17-ந் தேதி மாலையில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தி னார் பழனிச்சாமி. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படி வேட்பாளர்களை தேர்வுசெய்திருந்த எடப்பாடி, அதனை வாசிக்க, மா.செ.க்கள் பலரும் சிபாரிசு செய்திருந்த நபர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்ததால் கோபம் கொப்பளித்தது.   “யோவ் இது லிஸ்ட்டே இல்லை. எங்களது சிபாரிசுகளைவிட உளவுத்துறை சிபாரிசுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீங்களா?” என மசெக்கள் எகிற சூடு பிடித்தது ..  மேலும் வாசிக்க …..

அரசியல் வாக்கு & தேர்தல்

சிவகங்கை மானமதுரையில் செல்போன் கூட இல்லாத எளிய வேட்பாளர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனித் தொகுதி. இந்தத் தொகுதியில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாரியப்பன் கென்னடி.   18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ-வும் ஓருவர் .   எனவே இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.,   அ.தி.மு.க சார்பில் நாகராஜனும், அ.ம.மு.க சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும் ,தி.மு.க சார்பில் இலக்கியதாசனும் களமிறங்கியிருக்கிறார்கள்.   இதில் திமுக சார்பில் சாதாரண எளிய தொண்டனை மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் வடமாநிலம்

கோவாவில் மிட்னைட் பதவி ஏற்ப்புக்கு பாஜகவின் கூட்டணி கட்சி சிவசேனா கடும் கண்டனம்

கோவாவில் நள்ளிரவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு பாஜகவை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததையடுத்து, புதிய முதல்வராக பிரமோத் சவாந்த் நேற்று முன் தினம் நள்ளிரவு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியை நள்ளிரவு நடத்தியதை பாஜக் கூட்டணியில் இடம் பிடித்துள்ள சிவசேனா விமர்சித்துள்ளது.  இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் “ மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பட்ட காலிலே படும் .. விலகினார் மற்றொரு மாவட்ட செயலாளர் கலைராஜன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன். இவர் நேற்று மாலை அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தார்.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது. தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, தினகரனை கடுமையாக விமர்சித்தது.   அப்போது முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார். அவர் தி.மு.க.வில் இணைந்ததுமே மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டசபை தமிழ்நாடு

ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தம் அதிமுக அரசு நீதிமன்றத்தில் தீடிர் பல்டி

நலிவடைந்த ஏழைகளுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் ரூ.2,000 வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

பலரும் எஸ்கேப்பாகி ஓட … திக்கு தெரியாத திசையில் தினகரனா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 15 நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.   வேட்புமனுதாக்கல் செய்ய இன்னும் 6 நாட்களே உள்ளன. அதிலும் வரும் 23 மற்றும் 24ந்தேதி விடுமுறை நாளாக உள்ளது. மீதியுள்ளது நான்கு நாட்களே.   ஆனாலும் இன்னும் மீதியுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. அதில் திருவண்ணாமலை, ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற தொகுதிகளும் மேலும் வாசிக்க …..