ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.
அரசியல் சட்டம் தமிழ்நாடு

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான்

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் கிடைத்தது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் குற்றவாளி ஜெயலலிதா இறந்த விட்டதால் சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   ஆனால் அவர்களுக்கு சிறையில் விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக அப்போதைய டிஐஜி மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

மெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்த விபத்தில் 79 பேர்  பலி , 76 பேர் படுகாயம்

மெக்ஸிகோவில் பெட்ரோலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல குழாய்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.   இந்த நிலையில், அத்தகைய குழாய்களில் துளையிட்டு பெட்ரோல் திருடி விற்பனை செய்வதை பலர் தொழிலாகவே செய்து வருகின்றனர். குறிப்பாக, போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்தச் சூழலில், ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து மெக்ஸிகோ அதிபராகப் பெறுப்பேற்றுள்ள ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடோர், பெட்ரோல் திருட்டைத் தடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் கேளிக்கை சமூகம்

வாடிவாசலை முறியடித்து விராலிமலை கின்னஸ் சாதனை : 1353 காளைகளும் 500 வீரர்களும்

உலக சாதனைக்காக 1353 காளைகள் பங்கேற்ற பிரமாண்ட போட்டியை புதுக்கோட்டை விராலிமலையில் பட்டமரத்தான்கோயில் திருவிழாவையொட்டி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.   உலக சாதனைக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,353 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.   இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.  இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது.   போட்டியில் மேலும் வாசிக்க …..

கலை மற்றும் இலக்கியம் புத்தகங்கள்

14 லட்சம் வாசகர்கள் ₹18 கோடி விற்பனை : சென்னை 42வது புத்தக கண்காட்சி

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 17 நாட்களாக நடைபெற்று வந்த 42வது புத்தக காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.   சென்னையில் 42வது புத்தக காட்சி கடந்த 4ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. புத்தக காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மொத்தம் 820 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டது. புத்தக காட்சியில் 10 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தலைப்பில் ஒன்றரை கோடி புத்தகங்கள் வைக்கப்பட்டது.   ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்களும், மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் தமிழ்நாடு

கோட்டையில் ஒபிஎஸ் யாகம் ஏன் ஸ்டாலின் கிடுக்கிப்பிடி – அதிமுகவில் ஈபிஎஸ் கோஸ்டி அதிர்ச்சி

பாஜக கூட்டணி வேண்டும் எனற கோஸ்டியில் ஒபிஎஸ் அணியும் ,  பாஜக கூட்டணி வேண்டாம்  எனற கோஸ்டியில் ஈபிஎஸ்  அணியும் இயங்கி வந்த நிலையில் , திமுக   தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.   அப்போது விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியது அதிமுகவில் எடப்பாடி கோஷ்டியினரிடம் அதிர்வலைகளை எற்படுத்தி உள்ளது   அப்படி என்ன தான் ஸ்டாளின் பேசினார் ..இதோ மேலும் வாசிக்க …..

ஆன்மிகம் கேரளா பயணம் பெண்கள்

51 இளம்பெண்கள் தரிசித்த நிலையில் 65 நாட்கள் பூஜைக்குப்பின் சபரிமலையில் நடை அடைக்கப்பட்டது.

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலத்தில் சில மாவட்டங்களில் பிற்போக்கு இந்துத்வா அமைப்புகளும், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.   இந்த சூழலில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சிலர் அய்யப்பனை தரிசிக்க மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

நாடாளுமன்ற 2019 தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கனிமொழி , சிவா உள்ளிட்ட 8 பேர்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசின் ஆட்சிகாலம் இன்னும் 40 நாட்களில் தேர்தல் அறிவிப்பு வந்தவவுடன் காபந்து அரசாகி விடும் நிலையில், நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.   இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றது.   இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் நேற்று 14 மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் நூதன போராட்டம்

அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் முடக்கம் காரணமாக, ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி புஷ் பீட்சா வழங்கினார்.   மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன.   இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் ஊதியம் இன்றி வேலை பார்த்து வருகிறார்கள்.   இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், தனக்காக ஊதியம் மேலும் வாசிக்க …..

ஆசியா சட்டம்

இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் சொத்துகள் மறுபடியும் முடக்கம்

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ரூ.16.40 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.   இதுதொடர்பாக, அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ” மும்பை மற்றும் புணே ஆகிய நகரங்களில் ஜாகீர் நாயக்கின் குடும்பத்தினரின் பெயர்களில் உள்ள சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.   அதன்படி, மும்பையில் உள்ள ஃபாத்திமா ஹைட்ஸ், ஆஃபியா ஹைட்ஸ் ஆகிய கட்டடங்கள், மும்பை பாந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேலும் வாசிக்க …..

அரசியல் குரல்கள் தேசியம்

திரண்ட பிரமாண்ட கூட்டம் எதிர்கட்சிகள் ஒற்றுமை பாஜக பதட்டம்

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.     மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் “ஒன்றுபட்ட இந்தியா’ என்ற பெயரில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.   காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பேசினர். மேலும் வாசிக்க …..