கேளிக்கை சினிமா

கடற்கன்னி புகைபடத்தால் தனது ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆண்ட்ரியா

தமிழகத்தை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியா jfwmagazine என்ற பிரபல ஆங்கில மாத இதழில் காலண்டர் அட்டைப்படத்திற்கு மேலாடை அணியாமல், கடற்கன்னி போல கொடுத்த போஸ் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. திரைத்துறையில் வலிமையான பெண் 185கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையானவர். தமிழகத்தை சேர்ந்தவரான இவர் மேடை நாடகக் கலைஞர், எழுத்தாளார், பாடகி என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2, வடசென்னை போன்ற படங்களில் ஆண்ட்ரியா ஏற்றிருந்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தன. தொடர்ந்து அதை தக்கவைக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் அவர் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது ஒரு பிரபல மாத இதழின் காலண்டருக்காக மேலாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். ஆண்ட்ரியாவை கடற்கன்னி போல சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள இப்புகைப்படம், கலையுலக ஆர்வலர்களிடம் பாராட்டுதல்களை பெற்று வருகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆண்ட்ரியாவை அவரது ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.