வேலைவாய்ப்புகள்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உதவி வரையாளர் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலியாக உள்ள உதவி வரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: உதவி வரைவாளர் (தமிழ்நாடு வனச்சார் நிலைப் பணி) – 02

சம்பளம்: மாதம் ரூ.19500 – ரூ. 62000

வயதுவரம்பு: 01.07.2018 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தகுதி: 10-வது தேர்ச்சி, ஐடிஐ / டிப்ளமோ சிவில் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2019 @ 5.45pm

விண்ணப்பிக்கும் முறை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (ARIGNAR ANNA ZOOLOGICAL PARK) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவனங்களுடன் – “The Deputy Director, Arignar Anna Zoological Park (AAZP), Vandalur, Chennai – 600048” – என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இத்துடன் ரூ.200/-க்கான வங்கி வரைவோலையை – ‘The Deputy Director, Arignar Anna Zoological Park (AAZP), Vandalur, Chennai – 600048’ – என்ற பெயரில் இணைத்து அனுப்ப வேண்டும்.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.