சமூகம் வாழ்வியல் வேலைவாய்ப்புகள்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

 
சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிலே சுமார் 28 லட்சம் பேர்  சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் . சிபிஎஸ்இ பிளஸ் 2 சுமார் 12 லட்சம் பேர்  தேர்வு எழுதுகிறார்கள் .. 
 
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ)பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கும்.
 
ஆனால், இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கவுள்ளன.
 
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்.15-ஆம் தேதி தொடங்கி ஏப்.3-ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்.21-இல் தொடங்கி மார்ச் 29-ஆம் தேதி முடிவடைகிறது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.