ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.
அரசியல் சமூகம்

எதிர்கட்சிகள் ஒன்று இணைந்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்

பிகார் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் ஆளாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக மேலும் வாசிக்க …..

உலகம்

அணு ஆயுத தயாரிப்பு 100 மில்லியன் டாலர் கள்ள வர்த்தகம் : வடகொரியா மீது ஐ.நா. குற்றச்சாட்டு

அணு ஆயுத தயாரிப்பில் இருந்து வடகொரியா தன்னை சிறிய அளவில் கூட மாற்றிக்கொள்ளவில்லை என்று ஐ.நா. அமைத்த சிறப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு, மற்றும் ஏவுகனை சோதனைகளை வடகொரியா தொடர்வதால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடை நீடிக்கிறது. இந்த நிலையில் ஜுன் 12-ம் தேதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அணு ஆயுத தயாரிப்பை மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

வீடுகளில் பிரசவம் பார்ப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிமுக அரசு அதிரடி

அரசு விதிகளின் படி மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் மருத்துவ உதவி இல்லாமல் வீட்டில் பெண் குழந்தை பிரசவித்த தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகா அதிக ரத்த போக்கால் மரணமடைந்தார். இதனையடுத்து வீட்டில் பிரசவம் பார்ப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தேனி அருகே கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் கண்ணன் (29). பிஇ பட்டதாரி. மனைவி மகாலட்சுமி (25). மகாலட்சுமிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

வீடுகளில் பிரசவம் பார்ப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிமுக அரசு அதிரடி

அரசு விதிகளின் படி மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். திருப்பூரில் மருத்துவ உதவி இல்லாமல் வீட்டில் பெண் குழந்தை பிரசவித்த தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகா அதிக ரத்த போக்கால் மரணமடைந்தார். இதனையடுத்து வீட்டில் பிரசவம் பார்ப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தேனி அருகே கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் கண்ணன் (29). பிஇ பட்டதாரி. மனைவி மகாலட்சுமி (25). மகாலட்சுமிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. மேலும் வாசிக்க …..

அரசியல்

தமிழ்நாடு சர்க்கரை ஆலை அதிபர்கள் பிரதமர் மோடியுடன் தீடிர் சந்திப்பு எதிரொலி தமிழிசை ஹச் ராஜா அப்செட்

தமிழ்நாட்டில் வறட்சியினால் கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதால் சர்க்கரை உற்பத்திக்கான செலவு அதிகமாகி வருமானம் குறைந்துவிட்டது. அதனால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்” எனத் தெரிவித்ததாக பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தமிழ்நாடு சர்க்கரை ஆலை அதிபர் சங்கத்தினர் தெரிவித்தனர் மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் என்றும் அதன் பின்னரே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், அதிபர்கள் பிரதமருடனான சந்திப்பு மேலும் வாசிக்க …..

சமூகம்

கனவு நினைவாகியது. கலைஞர் அய்யாவுக்கு எடப்பாடி அய்யாவுக்கும் கோடி நன்றி

கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் மேலும் வாசிக்க …..

உலகம் சமூகம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடந்து லண்டன் கனடாவில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி முன்னெடுப்பு

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக நிதி முழுவதுமாக திரட்டப்பட்டு அதற்கான விழாவும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகளை “TamilChairUK” என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் இருக்கைக்கும், தமிழ்த் துறைக்கும் என்ன வேறுபாடு பற்றி முதலில் அறிந்து கொள்ளுதல் அவசியம் . ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே மேலும் வாசிக்க …..

சமூகம்

240 கோடி மறுமதிப்பீடு முறைகேடு அதிர வைக்கும் அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்கள் போடப்பட்டதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். உமாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 60 மாணவர்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு மேலும் வாசிக்க …..

கேளிக்கை

26 வருடங்களை பூர்த்தி செய்த அஜித் விவேக் ஓபராய் வாழ்த்து

நடிகர் அஜித்துக்கு பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வா இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 1993 – ம் ஆண்டு ஜுன் மாதம் 4 – ம் தேதி வெளியானபடம் அமராவதி. இந்த படத்தில் நடிப்பதற்காக 1992 – ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 – ம் தேதி நடிகர் அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தவகையில நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி நேற்றுடன் 26 ஆண்டுகளாகிறது. மேலும் வாசிக்க …..

சமூகம் பெண்கள்

ஹீலர் பாஸ்கர் கைதின் பிண்ணனி

மருத்துவம் இல்லாமல் சுகப்பிரசவம் குறித்த பயிற்சி முகாம் தொடர்பாக விளம்பரம் அளித்த ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பானுமதி தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகள் இன்றி இயற்கை முறையில், குழந்தை பெறுவது தொடர்பான பயிற்சி முகாம் குறித்த விவகாரம் தொடர்பாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,கர்ப்பினி பெண்களுக்கு மருத்துவமனையில் தான் பிரசவம் மேலும் வாசிக்க …..