அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மேரீஸ் வில்லே பகுதியை சேர்ந்தவர் ஜான் கிரைன். சம்பவத்துன்று இவன் ஒரு கடைக்கு சென்று காபி குடித்தார்
 
அதற்கு பணம் தராமல் வெளியே செல்ல முயன்ற போது அங்கு சீக்கியர் ஒருவர் பணியில் இருந்தார். அவரிடம் குடித்த காபிக்கு பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கிரைன் சீக்கியரை தாக்கி மேலும் சூடான காபியை அவரது முகத்தில் ஊற்றி அவமதித்தார்.
 
இத்தாக்குதலில் சீக்கிய ஊழியர் காயம் அடைந்து வலியால கதறினார் . தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கிரைன் அங்கிருந்து ஓடிவிட. மறுநாள் அவரை போலீசார் கைது செய்தனர்.
 
அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு முஸ்லிம்களை பிடிக்காது. அவரை முஸ்லிம் என கருதி தாக்கினேன் என கிரைன் கூறினார்
 
இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். திருட்டு- தாக்குதல் மற்றும் இனவெறி உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதை தொடந்து யூபா கவுண்டி சிறையில் ஜான் கிரைன். அடைக்கப்பட்டார். சீக்கியரை முஸ்ஸிம் என கருதி தாக்குதல் தொடர்வது பல முறை நடந்து உள்ளது