2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சந்தானம், நடிகை பிரியாமணி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், திரைத்துறையில்,

2011
நடிகர்கள் – ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ்,
நடிகை – குட்டி பத்மினி,
நகைச்சுவை நடிகர் – பாண்டு,
நடன இயக்குனர் – புலியூர் சரோஜா
பிண்ணனிப் பாடகி – சசி ரேகா
உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2012
நடிகர்கள் – என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து,
நடிகைகள் – டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி
கானா பாடல் கலைஞர் – உலகநாதன்
இயக்குனர் – சித்ரா லட்சுமணன்
உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

2013
நடிகர்கள் – பிரசன்னா, ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்
நடிகைகள் – குமாரி காஞ்சனா தேவி, சாரதா, நளினி
நாட்டுப்புறப் பாடகர் – வேல்முருகன்
நாட்டுப்புறப் பாடகி – பரவை முனியம்மா
பின்னணிப் பாடகர் – ஆர்.கிருஷ்ணராஜ்
உள்ளிட்ட 30 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2014
நடிகர்கள் – கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
இயக்குனர் – சுரேஷ் கிருஷ்ணா
பாடகி – மாலதி
நடன இயக்குனர் – என்.ஏ.தாரா
மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

2015
நடிகர் – பிரபுதேவா
இயக்குனர் – ஏ.என்.பவித்ரன்
இசையமைப்பாளர் – விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் – யுகபாரதி
ஒளிப்பதிவாளர் – ஆர்.ரத்தினவேலு
பின்னணிப் பாடகர் – கானா பாலா
உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுடன், பல்வேறு கலைத்துறை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2016
நடிகர்கள் – சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி
நாட்டுப்புறப்பாடகர் கலாராணி உள்ளிட்ட 20 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2017
நடிகர்கள் – விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
நடிகை – பிரியா மணி
இயக்குனர் – ஹரி
இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பாளர் – கலைஞானம்
உள்ளிட்ட 28 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2018
நடிகர்கள் – ஸ்ரீகாந்த், சந்தானம்
தயாரிப்பாளர் – ஏ.எம்.ரத்தினம்
ஒளிப்பதிவாளர் – ரவிவர்மன்
பின்னணிப் பாடகர் – உன்னி மேனன்
உள்ளிட்ட, பலதுறை சார்ந்த 34 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயல் பிரிவில் புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோருக்கு பாரதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்பிரிவில் எஸ், ஜானகி, சரோஜா, லலிதா, டி.வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்தி மாலா பாலி, வி.பி. தனஞ்செயன், சி.வி. சந்திரசேகருக்கு பால சரஸ்வதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் கலை வித்தகர்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கு சான்றிதழுடன் தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவுரவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.