17-வது மக்களவைத் தேர்தலில் 72 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற 4-ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
 
17-வது மக்களவைத் தேர்தலின் முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. இதில், மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்தாலும் அங்கு அதிகபட்சமாக 76.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது .