பிரதமர் மோடியின் பல வசனங்களில் அச்சே தின் என்று கூறும் நல்ல நாட்கள் நமக்காக காத்திருக்கிறது என்பது மிகப் பிரபலம். ஆனால் பாஜக வின் முக்கிய தலைவர் லஷ்மி கண்டா “நல்ல நாளை யார் தான் அனுபவிக்கிறார்கள் என தெரியாது; ஆனால் நிச்சயம் சாமானியன் இல்லை” என்று கூறியது பெரும் பரபரப்பை கிளிப்பி வருகிறது ..
 
 
லஷ்மி கண்டா பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் கூட. இவர் கடந்த 22ம் தேதி சரயு – யமுனா ரயிலின் 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்தார். இது ஒன்று அல்லது இரண்டு அல்ல சுமார் 9 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது.
 
அவர் ரயிலில் இருந்தவாறு தனது ரயில் பயணத்தின் மிக மோசமான அனுபவம் குறித்து விடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
 
அதில், தயவு கூர்ந்து பிரதமர் மோடி அவர்களே சாமானிய மக்களுக்காகவும் கவனம் செலுத்துங்கள்.
 
இந்த ரயிலில் இருக்கை, கதவு, கழிவறை அனைத்தும் உடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரமாக நாங்கள் ரயிலில் உள்ளோம்.
ஆனால் ரயில் தாமதம் குறித்து யாருமே பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. உணவோ, தங்குமிடமோ இல்லை.
 
தயவு செய்து புல்லட் ரயில், மணிக்கு 120, 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்களை எல்லாம் மறந்துவிடுங்கள்.
 
நாங்கள் பல மணி நேரமாக நடைபாதையில்தான் இருந்தோம், கடும் குளிரில் நடுங்கிக் கொண்டு ரயிலுக்காக காத்திருந்தோம். இது பற்றி அரசுக்கும், ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சருக்கும் மின்னஞ்சல் செய்தும் இதுவரை பதிலில்லை.
 
பணக்காரர்களுக்காக இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி ரயில்கள் எல்லாம் சரி, ஏழைகள் பயன்படுத்தும் இந்த ரயிலைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள், ரயில்வே அமைச்சர் இந்த ரயிலில் பயணிக்க வேண்டும்.
 
மோடிஜி … மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். நல்ல நாட்களை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நிச்சயம் அது சாமானியம் இல்லை என்பது மட்டும் தெரியும் என்று கூறியுள்ள அந்த விடியோ வைரலாகியுள்ளது.
 
அதனையும், புல்லட் ரயில் திட்டத்தையும் கடுமையாக சாடி பாஜக தலைவர் ஒருவரே விடியோ வெளியிட்டிருப்பது, நாட்டின் உண்மை நிலையை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.
 
அதாவது, மக்கள் அதிருப்தியில் உள்ளனர் மோடிஜி, நல்ல நாட்களை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நிச்சயம் அது சாமானியம் இல்லை என்பது மட்டும் தெரியும் என்று அமிருதசரஸைச் சேர்ந்த பாஜக தலைவர் லஷ்மி கண்டா சாவ்லா தெரிவித்திருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரின் குரல் சமூகவலை தளத்திலே ஒலித்து அது பாமர மக்களுக்கு தங்களது குரலாக ஒலிப்பதாகவே போற்றி வருவது குறிப்பிடதக்கது