பண்டிகை காலங்களில் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்தும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு ரூ.350 கோடி மது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்காக அனைத்து மதுமான கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைத்துள்ளது. தீபாவளி நாளன்று மட்டும் ரூ.150 கோடி மது விற்பனையாகும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மக்கள் நலன் மீது அக்கறையின்றி மது விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அரசு மதுபான கடைகளில் ரூ.350 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டதற்கு மகளின் மைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.