சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், எச்ஆர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Petroleum Corporation Ltd

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

பணி மற்றும் காலியிடங்கள்:
1. Engineer (Chemical) – 21
2. Engineer (Mechanical) – 09
3. Engineer (Electrical) – 05
4. Engineer (Civil) – 02
5. Engineer (Metallurgy) – 01
6. IT&S Officer – 01
7. Human Resources Officer – 02
8. Safety Officer – 01

சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் Civil, Mechanical, Electrical, Electrical & Electronics, Computer Science, Information Technology, Electronics & Communication, Technology in Chemical, Petroleum, Petrochemicals போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மனிதவள பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ, பணியாளர் மேலாண்மை, தொழிற்துறை உறவுகள், தொழிலாளர் நலன், சமூக பணி, வணிக நிர்வாகத்தில் (எம்பிஏ) முதுகலை பட்டம் பெற்றவர்கள், தொழில்துறை பாதுகாப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.09.2018 தேதிப்படி 26 வயது முடிந்திருக்க வேண்டும். மேலும் உட்ச பட்ச வயது வரம்பில் சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர் ரூ.500 மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2018 to 08.10.2018

விண்ணப்பிக்கும் முறை: Chennai Petroleum Corporation Limited என்ற என்ற வலைதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி விவரங்கள் அறிய…